தேடுதல்

Vatican News
பல்கேரிய திருத்தூதுப் பயணம் பல்கேரிய திருத்தூதுப் பயணம்  (AFP or licensors)

"திரு அவையின் தாய் அன்னை மரியா" விழா டுவிட்டர் செய்தி

"திரு அவையின் அன்னையான புனித மரியாவே, இயேசுவில் நம்பிக்கை கொண்டு, எம்மை முழுமையாக அவரிடம் ஒப்படைக்க எமக்கு உதவியருளும்"

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

திரு அவையின் தாயாம் அன்னை மரியே, இயேசுவின் அன்பில் நம்பிக்கைக் கொள்ளவும், அவரிடம் எம்மை முழுமையாக ஒப்படைக்கவும் எமக்கு உதவியருளும் என்ற கருத்தை வெளியிடும் டுவிட்டர் செய்தியை, ஜூன் 10, இத்திங்களன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டார்.

திருஅவையில் இத்திங்களன்று சிறப்பிக்கப்பட்ட "திரு அவையின் தாய் அன்னை மரியா" என்ற விழாவையொட்டி தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ள திருத்தந்தை, "திரு அவையின் அன்னையான புனித மரியாவே, குறிப்பாக எங்கள் துன்ப வேளைகளில், சிலுவையின் நிழலில் நாங்கள் நின்றுகொண்டு, எம் விசுவாச முதிர்ச்சியை நோக்கி அழைக்கப்படும் வேளையில், இயேசுவில் நம்பிக்கை கொண்டு, எம்மை முழுமையாக அவரிடம் ஒப்படைக்க எமக்கு உதவியருளும்" என்ற சொற்களைப் பதிவு செய்திருந்தார்.

மேலும், இவ்வாண்டு அக்டோபர் மாதம் சிறப்பிக்கப்படவிருக்கும் மறைபரப்புப்பணி நாளுக்குரிய செய்தியொன்றை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறன்று தூய ஆவியாரின் வருகைப் பெருவிழாவையொட்டி, வெளியிட்டார்.

இச்செய்தியை மையப்படுத்தி இஞ்ஞாயிறன்று தன் டுவிட்டர் செய்தியை வழங்கிய திருத்தந்தை, "ஆண், பெண் மறைப்பரப்புப் பணியாளர்களுக்கும், தங்கள் திருமுழுக்கு வழியாக திரு அவையின் மறைபரப்புப்பணியில் பங்குபெறும் அனைவருக்கும், என் இதயம் நிறை ஆசீரை வழங்குகிறேன்" என்ற சொற்களைப் பதிவு செய்திருந்தார்.

10 June 2019, 16:27