தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ், Shimon Peres, Mahmoud Abbas திருத்தந்தை பிரான்சிஸ், Shimon Peres, Mahmoud Abbas 

புனித பூமியில் அமைதி நிலவ செபம்

ஆண்டவரே, எம் நாவுகள் மற்றும் கரங்களிலிருந்து வன்முறையை அகற்றியருளும், உடன்பிறப்பு என்பது, எம்மை எப்போதும் ஒன்றிணைக்கும் சொல்லாக இருப்பதாக

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

புனித பூமியில் அமைதி நிலவ வேண்டும் என்பதற்காக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் விண்ணப்பத்தின்பேரில், ஜூன் 08, இச்சனிக்கிழமை பகல் ஒரு மணிக்கு "அமைதிக்காக ஒரு நிமிடம்" செபம் கடைப்பிடிக்கப்பட்டது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத் தலைவர்களுக்கு இடையே, 2014ம் ஆண்டு ஜூன் 8ம் தேதி, வத்திக்கானில், வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு இடம்பெற்றதன் ஐந்தாம் ஆண்டை நினைவுகூரும் முறையில், ஜூன் 08, இச்சனிக்கிழமை பகல் ஒரு மணிக்கு "அமைதிக்காக ஒரு நிமிடம்" செபம் கடைப்பிடிக்கப்பட்டது.

மேலும், இந்நிகழ்வை முன்னிட்டு, தன் டுவிட்டர் செய்தியிலும், ஆண்டவரே, எம் நாவுகள் மற்றும் கரங்களிலிருந்து வன்முறையை அகற்றியருளும், எம்மை எப்போதும் ஒன்றிணைக்கும் சொல்லாக உடன்பிறப்பு என்பது இருக்கவும், எம் வாழ்வு, எப்போதும் அமைதியின் பாதையாக இருக்கவும், எம் இதயங்களையும், மனங்களையும் புதுப்பித்தருளும், என்ற சொற்களை இச்சனிக்கிழமையன்று எழுதியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், தூய ஆவியார் பெருவிழாவாகிய, ஜூன் 09, இஞ்ஞாயிறன்று, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில், உரோம் நேரம் காலை 10.30 மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பெருவிழா திருப்பலியை தலைமையேற்று நிறைவேற்றுவார்.

மேலும், தூய ஆவியார் பெருவிழாவையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டர் செய்தியில் இவ்வாறு எழுதியுள்ளார். தூய ஆவியார், நம் இதயங்களில் மூச்சு விடுகின்றார் மற்றும், இறைத்தந்தையின் கனிவை நம் மூச்சில் உள்வாங்குவோம். திருஅவை, நற்செய்தியை மகிழ்வுடன் அறிவிப்பதற்காக, அதன் மீது மூச்சு விடுகின்றார் தூய ஆவியார். நம்பிக்கையைக் கட்டியெழுப்ப உலகின் மீது மூச்சு விடுகின்றார்  தூய ஆவியார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 June 2019, 15:10