வத்திக்கான், புனித பேதுரு வளாகத்தில், தூய ஆவியார் வருகைப் பெருவிழா திருப்பலியில் திருத்தந்தை பிரான்சிஸ் வத்திக்கான், புனித பேதுரு வளாகத்தில், தூய ஆவியார் வருகைப் பெருவிழா திருப்பலியில் திருத்தந்தை பிரான்சிஸ் 

பணிவு மற்றும் நற்செய்தி காட்டும் பிறரன்பின் எடுத்துக்காட்டு

திருத்தந்தை : சூடானில் வன்முறைகள் நிறுத்தப்படவும், கலந்துரையாடல் வழியாக பொதுநலன் காக்கப்படவும் நாமனைவரும் இணைந்து செபிப்போம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

போலந்து நாட்டில் அருளாளர் Michele Giedroyc மீது மக்கள் கொண்டிருக்கும் பக்தி முயற்சிகளை திருஅவை அங்கீகரித்து உறுதி செய்துள்ளதற்கு நன்றி கொண்டாட்டங்கள் இச்சனிக்கிழமை அந்நாட்டில் இடம்பெற்றது குறித்து தன் ஞாயிறு அல்லேலூயா வாழ்த்தொலி உரையில் எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

போலந்து, மற்றும், லித்துவேனிய ஆயர்கள் பங்குபெற்ற இந்த திருவழிபாட்டுக் கொண்டாட்டங்கள்  வழியாக, இவ்விரு நாடுகளின் உறவு மேலும் பலப்படும் என்ற நம்பிக்கையை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 15ம் நூற்றாண்டில் போலந்தின் கிராக்கோவில் வாழ்ந்த இந்த அருளாளர், பணிவு மற்றும் நற்செய்தி காட்டும் பிறரன்பின் எடுத்துக்காட்டாக இருந்தார் என்றார்.

மேலும், சூடானின் நிலைமைகள் குறித்து வெளியாகி வரும் செய்திகள் மிகவும் வேதனையையும், கவலையையும் தருவதாக உள்ளன என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வன்முறைகள் நிறுத்தப்படவும், கலந்துரையாடல் வழியாக பொதுநலன் காக்கப்படவும் நாமனைவரும் இணைந்து செபிப்போம் என கேட்டுக் கொண்டார்.

அன்னை மரியா நம் அனைவருக்கும் தேவையான அருளை பெற்றுத் தருவாராக என வேண்டி தன் அல்லேலூயா வாழ்த்தொலி உரையை நிறைவுச் செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 June 2019, 16:57