“சக்தி பரிமாற்றம் மற்றும் பொதுவான நம் இல்லத்தைப் பராமரித்தல்” என்ற தலைப்பில் நடந்த கூட்டத்தில் திருத்தந்தை “சக்தி பரிமாற்றம் மற்றும் பொதுவான நம் இல்லத்தைப் பராமரித்தல்” என்ற தலைப்பில் நடந்த கூட்டத்தில் திருத்தந்தை  

காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படுவோர் ஏழைகள்

காலநிலை மாற்றத்தைக் குறைப்பதற்கு உலகினர் உடனடியாக செயல்திட்டங்களில் இறங்க வேண்டும், திருஅவையும் தனது பங்களிப்பை அளிக்கும் - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

தற்போது மனித சமுதாயம் எதிர்கொள்ளும் காலநிலை மாற்றத்தின் எதிர்மறை விளைவுகளைக் குறைப்பதற்கு, சரியான மற்றும் உறுதியான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட்டால், அம்மாற்றத்தின் மிக மோசமான தாக்கங்களைத் தவிர்க்க முடியும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளியன்று கூறினார். 

“சக்தி பரிமாற்றம் மற்றும் பொதுவான நம் இல்லத்தைப் பராமரித்தல்” என்ற தலைப்பில், நடந்த கூட்டத்தில் திருத்தந்தை திருப்பீட ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற அவை நடத்தும் பன்னாட்டு கருத்தரங்கில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகளை, ஜூன் 14, இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாறு கூறினார்.

காலநிலை மாற்றத்தைக் குறைப்பதற்கு, மற்றவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்றோ அல்லது, குறுகியகால பொருளாதார ஆதாயங்களுக்கு முன்னுரிமை கொடுத்தோ, நாம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றுரைத்த திருத்தந்தை, காலநிலை மாற்றம் குறித்த பிரச்சனைக்கு உடனடியாக நாம் செயல்திட்டங்களில் இறங்க வேண்டும், இதில், திருஅவை தனது பங்கை ஆற்றும் என்று கூறினார்.

நியாயமான சக்தி பரிமாற்றம், கார்பன் வெளியேற்றத்தால் ஏற்படும் மாசுபாட்டைக் குறைப்பதற்கு நடவடிக்கை, காலநிலை மாற்றம் முன்வைக்கும் ஆபத்துக்கள் குறித்த அறிக்கைகளை வெளியிடும்போது ஒளிவுமறைவற்ற தன்மை ஆகிய மூன்று தலைப்புக்களில் தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

காலநிலை மாற்றத்தின் எதிர்விளைவுகளால் ஏழைகளும், நம் வருங்காலத் தலைமுறைகளுமே அதிகம் துன்புறுவர் என்றும், இன்றையத் தலைமுறைகளின் பொறுப்பற்ற தன்மைக்கு, நம் பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும் பலியாகக் கூடாது என்றும் கூறியத் திருத்தந்தை, இப்பூமி மற்றும் ஏழைகளின் அழுகுரல்களை நிறுத்துவதற்கு, துணிச்சல் அவசியம் என்றும் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 June 2019, 15:02