தேடுதல்

Vatican News
அமெரிக்க, மற்றும், வட கொரிய அரசுத்தலைவர்கள்  சந்திப்பு அமெரிக்க, மற்றும், வட கொரிய அரசுத்தலைவர்கள் சந்திப்பு 

சந்திப்புக் கலாச்சாரத்தின் சிறந்ததோர் எடுத்துக்காட்டு

கொரிய தீபகற்பத்திற்கு மட்டுமல்ல, உலகம் முழுமைக்கும் உதவும் வகையில், அமைதியின் பாதையில் அரசுத் தலைவர்கள் நடைபோட...

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர், மற்றும், தென்கொரிய, வடகொரிய அரசுத் தலைவர்களுக்கிடையே இஞ்ஞாயிறன்று இடம்பெற்ற சந்திப்புக் குறித்து தன் மகிழ்ச்சியை வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த மூன்று தலைவர்களுக்கிடையே இடம்பெற்ற சந்திப்புக் குறித்து ஞாயிறு மூவேளை செப உரைக்குப்பின் தன் கருத்தை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  சந்திப்புக் கலாச்சாரத்தின் சிறந்ததொரு எடுத்துக்காட்டு கொரியாவில் இடம்பெற்றுள்ளது என்று எடுத்துரைத்தார்.

கொரிய தீபகற்பத்திற்கு மட்டுமல்ல, உலகம் முழுமைக்கும் உதவும் வகையில், அமைதியின் பாதையில், கொரிய அரசுகளின் தலைவர்களுக்கும், அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத் தலைவருக்கும் இடையே இடம்பெற்ற சந்திப்பு உதவ செபிப்போம்' என திருத்தந்தை கூறினார்.

G.20 சந்திப்பிற்கென ஜப்பான் சென்றிருந்த அமெரிக்க அரசுத்தலைவர் டொனால்டு டிரம்ப் அவர்கள், ஜூன் 29, சனிக்கிழமையன்று தென் கொரியாச் சென்று அரசுத் தலைவர் Moon Jae-in அவர்களைச் சந்தித்ததுடன், வடகொரிய அரசுத் தலைவரைச் சந்திக்கும் விருப்பத்தை வெளியிட்டு, ஞாயிறன்று, தென்கொரியாவுக்கும் வட கொரியாவுக்கும் இடையில் இராணுவக் கட்டுப்பாட்டில் இல்லாத பொதுப்பகுதியில் வடகொரிய அரசுத்தலைவர் Kim Jong-Un அவர்களைச் சந்தித்து உரையாடினார்.

30 June 2019, 13:05