தேடுதல்

Vatican News
சீரோ மலங்கரா திருஅவையில் வாரிசுரிமை ஆயர்கள் அறிவிப்பு சீரோ மலங்கரா திருஅவையில் வாரிசுரிமை ஆயர்கள் அறிவிப்பு 

மூவாற்றுப்புழா சீரோ-மலங்கரா மறைமாவட்ட ஆயர் நியமனம்

மூவாற்றுப்புழா வாரிசுரிமை ஆயராக இருந்த ஆயர் Yoohanon Mar Theodosius அவர்கள், அம்மறைமாவட்ட ஆயராக நியமனம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்

கேரளத்தின் மூவாற்றுப்புழா சீரோ-மலங்கரா மறைமாவட்டத்தின் ஆயராக, அதன் வாரிசுரிமை ஆயர் Yoohanon Mar Theodosius அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதற்கு தன் ஒப்புதலை வழங்கியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அம்மறை மாவட்ட ஆயர்  Abraham Mar Julios அவர்களின் பணி ஓய்வை  மலங்கரா ஆயர் மன்றம் ஏற்றுக்கொண்டு,  வாரிசுரிமை ஆயராகப் பணியாற்றிய, ஆயர் Yoohanon Mar Theodosius அவர்களை நியமித்துள்ளதற்கு தன் ஒப்புதலை வழங்கியுள்ளார் திருத்தந்தை.

கேரளாவின் புதுசேரி பாகோன் எனுமிடத்தில் 1959 ஏப்ரல் 8ம் தேதி பிறந்த ஆயர் Yoohanon Mar Theodosius அவர்கள், 1985ம் ஆண்டு அருள்பணியாளராகவும், 2017ம் ஆண்டு  ஆயராகவும்  திருநிலைப்படுத்தப்பட்டார்.

ஐரோப்பா மற்றும் ஓசியானியாவில் வாழும் சீரோ-மலங்கரா வழிபாட்டுமுறை கத்தோலிக்கர்களுக்கு சிறப்புப் பார்வையாளராக நியமிக்கப்பட்ட ஆயர் Yoohanon Mar Theodosius அவர்கள், 2018ம் ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி முதல், மூவாற்றுப்புழா மறைமாவட்ட வாரிசுரிமை ஆயராகப் பணியாற்றி வந்துள்ளார்.

மூவாற்றுப்புழா மறைமாவட்டத்தின் ஆயராக இவர் பெயரை மலங்காரா ஆயர் மன்றம் திருத்தந்தையிடம் பரிந்துரைக்க, திருத்தந்தையும் அதனை ஏற்று நியமனத்தை உறுதி செய்துள்ளார்

11 June 2019, 15:07