போம்பேயி நகரின் செபமாலை அன்னை மரியாவின் ஓவியம் போம்பேயி நகரின் செபமாலை அன்னை மரியாவின் ஓவியம் 

"புனித செபமாலையின் கன்னியே, எங்களுக்கு உதவியருளும்"

மே 8ம் தேதி, சிறப்பிக்கப்பட்ட போம்பேயி அன்னை மரியாவின் திருநாளையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டர் செய்தியை, வெளியிட்டுள்ளார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மே 8ம் தேதி, இப்புதனன்று சிறப்பிக்கப்பட்ட போம்பேயி அன்னை மரியாவின் திருநாளையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டர் செய்தியை, வெளியிட்டுள்ளார். 

"புனித செபமாலையின் கன்னியே, நாங்கள் ஒரே இதயமும், ஆன்மாவும் கொண்டவர்களாய், விண்ணக இல்லத்தை நோக்கி பயணிக்கும் புனித மக்களாய் இருக்க உதவியருளும்" என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியாகப் பதிவாகியிருந்தன.

1891ம் ஆண்டு, திருத்தந்தை 13ம் லியோ அவர்களின் பிரதிநிதியாக, போம்பேயி சென்ற கர்தினால் Raffaele Monaco La Valletta அவர்களால் அர்ச்சிக்கப்பட்ட புனித செபமாலை அன்னையின் துணை பசிலிக்கா, இந்த பக்தி முயற்சிக்கு அடித்தளமாக அமைந்துள்ளது.

அரியணையில் அமர்ந்திருக்கும் அன்னை மரியாவும், அவர் மடியில் அமர்ந்திருக்கும் குழந்தை இயேசுவும், இருபுறமும் முழந்தாள் படியிட்டிருக்கும் புனித தொமினிக் மற்றும் சியென்னா நகர் புனித காத்தரீன் ஆகிய இருவருக்கும் செபமாலை வழங்குவதுபோல் அமைந்திருக்கும் பாரம்பரிய ஓவியம், உலகெங்கும் பிரபலமானது.

மேலும், பல்கேரியா மற்றும் வட மாசிடோனியா நாடுகளில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தூதுப்பயணம் மேற்கொண்டதன் இறுதியில் டுவிட்டர் செய்தியொன்றை வெளியிட்டிருந்தார்.

"மற்றவர்களை நம் சகோதரர்களாக, சகோதரிகளாகக் கண்ணோக்கி, அவர்களை அன்பு செய்து, அவர்கள் தேவைகளை நிறைவேற்றுவதற்கு, நம்பிக்கை நம்மை அழைத்துச் செல்லவேண்டும்" என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியாக, மே 7, இச்செவ்வாய் மாலை வெளியாயின.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 May 2019, 15:26