உக்ரைன் கத்தோலிக்க ஆயர்கள்ஆன்மீக தியானம் உக்ரைன் கத்தோலிக்க ஆயர்கள்ஆன்மீக தியானம் 

உக்ரைன் கிரேக்க-கத்தோலிக்கப் பிரதிநிதிகள் கூட்டம்

கிரேக்க-கத்தோலிக்கத் திருஅவையின் வாழ்வு மற்றும் தேவைகள் பற்றி ஆழமாக அறிவதற்கும், ஏனைய கிறிஸ்தவத் திருஅவைகளுடன் இணைந்து, நற்செய்தியை அறிவிக்கவும், வருகிற ஜூலையில் வத்திக்கானில் நடைபெறும் கூட்டம் உதவும்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

உக்ரைன் நாட்டில் தற்போது நிலவும் மிகவும் இக்கட்டான மற்றும், குழப்பம் நிறைந்த சூழல்களை முன்னிட்டு, உக்ரைன் கிரேக்க-கத்தோலிக்கத் திருஅவை பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் நடத்துவதற்கு, அவர்களை உரோம் நகருக்கு அழைப்பதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தீர்மானித்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் கிரேக்க-கத்தோலிக்கத் திருஅவையின் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும், தலத்திருஅவைத் தலைவர்களுடன், வருகிற ஜூலை மாதம் 5,6 ஆகிய நாள்களில், நடைபெறும் கூட்டத்தில், அந்நாட்டுடன் தொடர்புடைய திருப்பீட தலைமையகத் தலைவர்களும் கலந்துகொள்வார்கள்.

இதன் வழியாக, உக்ரைன் நாட்டிலும், உலகின் அனைத்துப் பகுதிகளிலும் மேய்ப்புப்பணியாற்றுகின்ற, உக்ரைன் கிரேக்க-கத்தோலிக்கத் திருஅவையுடன், தான் கொண்டிருக்கும் ஒருமைப்பாட்டுணர்வை வெளிப்படுத்துவதற்கு திருத்தந்தை விரும்புகிறார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கிரேக்க-கத்தோலிக்கத் திருஅவையின் வாழ்வு மற்றும் தேவைகள் பற்றி ஆழமாக அறிவதற்கும், இலத்தீன் வழிபாட்டுமுறை கத்தோலிக்கத் திருஅவை மற்றும் ஏனைய கிறிஸ்தவத் திருஅவைகளுடன், இயலக்கூடிய விதத்தில், இணக்கத்துடன், துன்புறும் மக்களுக்கு ஆதரவாகவும், அமைதியை ஊக்குவிக்கவும், நற்செய்தியை மிகவும் பலனுள்ள முறையில் அறிவிக்கவும், இக்கூட்டம் உதவும் என நம்பப்படுகின்றது. 

அக்டோபர் உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றம்

மேலும், வருகிற அக்டோபர் மாதம், 6ம் தேதி முதல் 27ம் தேதி வரை, அமேசான் பகுதி பற்றி வத்திக்கானில் நடைபெறும் உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றத்தின் நடவடிக்கைகள் பற்றி அறிவிக்கும் செயலராக, Sào Pauloவின் முன்னாள் பேராயர் கர்தினால் Claudio Hummes அவர்களை, இச்சனிக்கிழமையன்று, திருத்தந்தை நியமித்துள்ளார்.

அம்மான்றத்தின் சிறப்பு செயலாளர்களாக, ஆயர் David MARTINEZ DE AGUIRRE GUINEA (பெரு நாடு), ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின், புலம்பெயர்ந்தோர் மற்றும் குடிபெயர்ந்தோர் துறையின் நேரடிப் பொதுச் செயலர் அருள்பணி Michael CZERNY சே.ச. அவர்களையும், திருத்தந்தை நியமித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 May 2019, 14:54