தேடுதல்

Vatican News
மறைக்கல்வியுரையின்போது......010519 மறைக்கல்வியுரையின்போது......010519  (Vatican Media )

வேலை வாய்ப்புகளுக்காக புனித யோசேப்பிடம் வேண்டல்

திருத்தந்தை : தங்கள் வேலைகளை இழந்தோருக்காகவும், வேலையின்றி அலைவோருக்காகவும் இறைவனிடம் பரிந்துரைக்குமாறு புனித யோசேப்பிடம் நான் வேண்டுகிறேன்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

தன் புதன் மறைக்கல்வி உரையின் இறுதியில், இப்புதனன்று சிறப்பிக்கப்பட்ட தொழிலாளரான புனித யோசேப்பின் விழா குறித்து எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

தொழிலாளரான புனித யோசேப்பு, அகில உலக திரு அவையின் பாதுகாவலரும் ஆவார் என்று கூறியத் திருத்தந்தை, நாசரேத்தின் எளிமை நிறைந்த தொழிலாளரான இவர், இயேசுவை நோக்கி நம்மை வழிநடத்திச் செல்வாராக என்ற ஆவலை வெளிப்படுத்தினார். இவ்வுலகில் நன்மைகளை ஆற்றிக்கொண்டிருப்போரின் தியாகச் செயல்களுக்கு புனித யோசேப்பு, உரமூட்டுவாராக என செபித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தொழிலாளர்களின் பாதுகாவலரான புனித யோசேப்பை நோக்கி தொழிலாளர்களின் நலனுக்காவும் வேண்டினார். தங்கள் வேலைகளை இழந்தோருக்காகவும், வேலையின்றி அலைவோருக்காகவும் இறைவனிடம் பரிந்துரைக்குமாறு புனித யோசேப்பிடம் தான் வேண்டுவதாகக் கூறி, தன் புதன் மறைக்கல்வி உரையை நிறைவுசெய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

01 May 2019, 12:10