தேடுதல்

Vatican News
இந்தியாவில் கிறிஸ்தவர்கள் இந்தியாவில் கிறிஸ்தவர்கள்  (AFP or licensors)

குவாலியெர் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் தைக்காட்டில்

குவாலியெர் மறைமாவட்ட புதிய ஆயர் ஜோசப் தைக்காட்டில் அவர்கள், 2018ம் ஆண்டில், Bharatpur புனித பேதுரு ஆலயப் பங்குத்தந்தையாகப் பணியைத் தொடங்கினார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

இந்தியாவின் குவாலியெர் (Gwalior) மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, அருள்பணி ஜோசப் தைக்காட்டில் (Joseph Thykkattil) அவர்களை, மே 31, இவ்வெள்ளியன்று நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கேரளாவின் எர்ணாகுளத்தில் 1952ம் ஆண்டு பிறந்த இவர், 1988ம் ஆண்டு ஆக்ரா உயர்மறைமாவட்டத்திற்கென அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். இவர் ஆக்ரா புனித பேதுரு கல்லூரியில் உதவித் தலைவராகவும் (1988-1990), ஆக்ரா பேராலய பங்குத்தந்தையாகவும் (1990-1999), பின்னர், Noida பங்குத் தந்தையாகவும் (1999-2002). பணியாற்றியுள்ளார். 2012ம் ஆண்டு முதல், ஆக்ரா உயர்மறைமாவட்டத்தின் முதன்மைக் குருவாகப் பணியாற்றிய, குவாலியெர் மறைமாவட்ட புதிய ஆயர் ஜோசப் தைக்காட்டில் அவர்கள், 2018ம் ஆண்டில், Bharatpur புனித பேதுரு ஆலயப் பங்குத்தந்தையாகப் பணியைத் தொடங்கினார். இவ்வெள்ளியன்று, குவாலியெர் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக நியமிக்கப்பட்டுள்ளார்.

31 May 2019, 16:23