கர்தினால் Nasrallah Pierre Sfeir கர்தினால் Nasrallah Pierre Sfeir  

மாரனைட் திருஅவை அநாதையாக்கப்பட்டுள்ளதாக கர்தினால்

கர்தினாலின் மரணத்தையொட்டி, லெபனான் நாட்டில் இருநாட்கள் அரசு விடுமுறை எனவும், தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

மாரனைட் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை, கர்தினால் Nasrallah Pierre Sfeir அவர்களின் மரணம் குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளதாகவும், அவரின்  உறவினர்களுக்கும், மாரனைட் திருஅவைக்கும், ஆறுதலை வழங்குவதாகவும், செய்தியொன்றை வெளியிட்டுள்ளார், திருப்பீட இடைக்கால தகவல் தொடர்பாளர் அலெஸ்ஸாந்த்ரோ ஜிசோத்தி.

இஞ்ஞாயிறன்று அதிகாலை லெபனான் நேரம் 3,.30 மணிக்கு இறைபதம் சேர்ந்த கர்தினால் Nasrallah Sfeir அவர்கள், இன்னும் 3 நாட்களில் தன் 99வது வயதை நிறைவுச் செய்ய இருந்தார்.

கர்தினால் Nasrallah Sfeir அவர்களின் மரணம் குறித்து செய்தி வெளியிட்ட முதுபெரும் தந்தை, கர்தினால் Beshara Rai அவர்கள், மாரனைட் திருஅவை, தற்போது, அநாதையாக்கப்பட்டுள்ளதாகவும், லெபனான் நாடு துக்க காலத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

லெபனான் அரசுத் தலைவர்  Michel Aoun, பிரதமர் Saad Hariri ஆகியோரும் தங்கள் அனுதாபச் செய்திகளை வெளியிட்டுள்ளனர்.

இம்மாதம் 15ம் தேதி, புதனன்றும், கர்தினாலின் அடக்க தினமான 16ம் தேதியும், அரசு விடுமுறை எனவும், அந்நாட்களில் தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கும் எனவும், அந்த இரு நாட்களும், தேசிய துக்க தினங்களாக அனுசரிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்தினால் அவர்களின் இறப்புடன் திருஅவையில் கர்தினால்களின் எண்ணிக்கை 221 ஆக குறைந்துள்ளது. இதில் 120 பேர் திருத்தந்தையை தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய, 80 வயதுக்குட்பட்டவர்கள்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 May 2019, 15:24