பாரிஸ் நகரின் நோத்ரு தாம் பேராலயம் - தீ விபத்துக்குப் பின்... பாரிஸ் நகரின் நோத்ரு தாம் பேராலயம் - தீ விபத்துக்குப் பின்... 

நோத்ரு தாம் தீ விபத்தையொட்டி தலைவர்களின் செய்திகள்

நோத்ரு தாம் பேராலய தீ விபத்தையடுத்து, போலந்து நாட்டின் ஆயர் பேரவை, நிதி உதவி வழங்குமாறு, மக்களுக்கு விண்ணப்பம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

தன் இறுதி இரவுணவின்போது, திருவிருந்து என்ற அருளடையாளத்தை, இயேசு உருவாக்கிய, புனித வியாழனை மையப்படுத்தி, ஏப்ரல் 18, இவ்வியாழனன்று, தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

"திருப்பலியில் நீங்கள் இயேசுவை சந்திக்கிறீர்கள், அவரது வாழ்வைப் பகிர்ந்துகொள்கிறீர்கள், அவரது அன்பை உணர்கிறீர்கள்; அங்கு, அவரது மரணமும், உயிர்ப்பும் உங்களுக்காக என்பதை உணர்கிறீர்கள்" என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியாக வெளியாயின.

மேலும், பாரிஸ் நகரின் நோத்ரு தாம் பேராலயம், தீ விபத்தில் சிதைந்ததையொட்டி, அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர், டொனால்ட் டிரம்ப் அவர்கள், இப்புதன் பிற்பகல், திருத்தந்தையை, தொலைப்பேசி வழியே அழைத்து, தன் நாட்டு மக்களின் பெயரால் அனுதாபங்களைத் தெரிவித்தார் என்று, வத்திக்கான் செய்தித்துறை தலைவர், அலெஸ்சாந்த்ரோ ஜிசோத்தி அவர்கள், ஒரு டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார்.

இதற்கிடையே, கிறிஸ்தவ ஒன்றிப்பு திருஅவையின் முதுபெரும் தந்தை பர்த்தலோமேயு அவர்கள், நோத்ரு தாம் பேராலய விபத்து குறித்து வெளியிட்ட செய்தியில், இப்பேராலயம், கிறிஸ்தவ நம்பிக்கை மற்றும் மனிதக் கலைப்படைப்பின் திறன் ஆகிய இரண்டும் சந்திக்கும் ஒரு மாபெரும் அடையாளம் என்று கூறியுள்ளார்.

நோத்ரு தாம் பேராலய தீ விபத்தையடுத்து, போலந்து நாட்டின் ஆயர் பேரவை, நிதி உதவி வழங்குமாறு, மக்களுக்கு விண்ணப்பம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த விண்ணப்பம், உயிர்ப்பு ஞாயிறன்று அனைத்து ஆலயங்களிலும் வாசிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 April 2019, 12:41