தேடுதல்

Vatican News
புனித வெள்ளி சிலுவைப்பாதை பக்தி முயற்சியில் திருத்தந்தை பிரான்சிஸ் புனித வெள்ளி சிலுவைப்பாதை பக்தி முயற்சியில் திருத்தந்தை பிரான்சிஸ்  (ANSA)

திருத்தந்தையின் புனித வெள்ளி டுவிட்டர் செய்தி

"அறையப்பட்ட கிறிஸ்துவின் விரிந்த கரங்களை நோக்குங்கள், அவர் உங்களைக் காப்பாராக. அன்பின் மிகுதியால் அவர் சிந்திய இரத்தம், உங்களைத் தூய்மையாக்க அனுமதியுங்கள்." - திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

புனித வெள்ளியின் சிகர நிகழ்வாக அமையும், இயேசுவின் பாடுகளையும், சிலுவை மரணத்தையும் மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வெள்ளியன்று தன் டுவிட்டர் செய்தியைப் பதிவிட்டார்.

"அறையப்பட்ட கிறிஸ்துவின் விரிந்த கரங்களை நோக்குங்கள், அவர் உங்களைக் காப்பாராக. அன்பின் மிகுதியால் அவர் சிந்திய இரத்தம், உங்களைத் தூய்மையாக்க அனுமதியுங்கள். இவ்வழியில் நீங்கள் மீண்டும் பிறக்க வழியாகும்" என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

மேலும், சுற்றுச்சூழலைக் குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2015ம் ஆண்டு வெளியிட்ட 'இறைவா உமக்கேப் புகழ்' திருமடலின் தொடர்ச்சியாக புனித பூமியில் மேற்கொள்ளப்பட்ட கருத்தரங்குகளின் தொகுப்பு, ஒரு நூலாக, ஏப்ரல் 18, புனித வியாழனன்று வெளியானது.

"திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஒருங்கிணைந்த சுற்றுச்சூழலியல்" என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்நூல், புனித பூமியின் பாதுகாவலர்களான பிரான்சிஸ்கன் துறவு சபையினரின் முயற்சியாக உருவாக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத் திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன், புனித பூமியின் பாதுகாவலரான பிரான்சிஸ்கன் துறவி Francesco Patton, பாலஸ்தீனிய பல்கலைக் கழகத்தின் பேராசிரியரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான Mohammed Dajani Daoudi ஆகியோர் உட்பட, பலர் பகிர்ந்துகொண்ட கருத்துக்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

19 April 2019, 11:33