தேடுதல்

Vatican News
பாஸ்கா திருவிழிப்பு திருவழிபாட்டில் திருத்தந்தையால் திருமுழுக்கு பெற்றவர்களில் ஒருவர் பாஸ்கா திருவிழிப்பு திருவழிபாட்டில் திருத்தந்தையால் திருமுழுக்கு பெற்றவர்களில் ஒருவர்  (Vatican Media)

புனித சனிக்கிழமை இரவு - பாஸ்கா திருவிழிப்பு வழிபாடு

இத்தாலி, ஈக்குவதோர், பெரு, அல்பேனியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த எட்டுப் பேருக்கு, திருமுழுக்கு, உறுதிபூசுதல் மற்றும் திருநற்கருணை அருளடையாளங்களை நிறைவேற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

ஏப்ரல் 20, இச்சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கு, வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்காவில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித இரவு பாஸ்கா திருவிழிப்பு திருவழிபாட்டைத் தொடங்கினார். பசிலிக்காவின் நுழைவாயில் மண்டபத்தில் புதிய நெருப்பு அர்ச்சிப்பு வழிபாட்டை நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பசிலிக்காவுக்குள், பாஸ்கா மெழுகுதிரி பவனியில் சென்றார். திருத்தந்தையைத் தொடர்ந்து, கர்தினால்கள் மற்றும் சில பொதுநிலையினரும் அந்த பவனியில் சென்றனர். பின்னர், பாஸ்கா பாடல் முழங்கப்பட்டது. அதன்பின்னர், இறைவார்த்தை வழிபாடு, திருமுழுக்கு வழிபாடு, மற்றும் திருநற்கருணை வழிபாடு ஆகியவற்றை திருத்தந்தை நிறைவேற்றினார்.

இத்தாலி, ஈக்குவதோர், பெரு, அல்பேனியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த எட்டுப் பேருக்கு, திருமுழுக்கு, உறுதிபூசுதல் மற்றும் திருநற்கருணை அருளடையாளங்களை நிறைவேற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ். இயேசுவின் உயிர்ப்புக்குத் தொடக்கமாக அமைகின்ற, இந்தப் புனித இரவு திருவிழிப்பு திருவழிபாடு, நெருப்பு, ஒளி, இசை, திருமுழுக்குத் தண்ணீர் ஆகியவற்றின் சக்திமிக்க அடையாளங்களால் அமைந்துள்ளது. கத்தோலிக்க திருவழிபாடுகளில் மிகவும் அழகானவைகளில் ஒன்றாக அமைந்துள்ள இந்த திருவிழிப்பு, நம்பிக்கை மற்றும் மறுபிறப்பு பற்றிப் பேசுகின்றன.

21 April 2019, 14:05