புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் உயிர்ப்பு ஞாயிறு திருப்பலியை நிறைவேற்றும் திருத்தந்தை பிரான்சிஸ் புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் உயிர்ப்பு ஞாயிறு திருப்பலியை நிறைவேற்றும் திருத்தந்தை பிரான்சிஸ் 

உயிர்ப்பு ஞாயிறு பெருவிழாத் திருப்பலி

இஞ்ஞாயிறு காலை பத்து மணிக்கு, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில், உயிர்ப்பு ஞாயிறு பெருவிழாத் திருப்பலியை தலைமையேற்று நிறைவேற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

ஏப்ரல் 21, இஞ்ஞாயிறு இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழா. இன்று கிறிஸ்துவின் காலியான கல்லறை பற்றி நாம் தியானிக்கின்றோம், அஞ்ச வேண்டாம், அவர் உயிர்த்தெழுந்துள்ளார் என்ற வானதூதர்களின் வார்த்தைகளையும் நாம் கேட்கின்றோம். கிறிஸ்துவின் உயிர்ப்பு, உலகின் உண்மையான நம்பிக்கை என்ற வார்த்தைகளை, உயிர்ப்புப் பெருவிழாவை மையப்படுத்தி, இஞ்ஞாயிறன்று தன் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இஞ்ஞாயிறு காலை பத்து மணிக்கு, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில், உயிர்ப்பு ஞாயிறு பெருவிழாத் திருப்பலியை தலைமையேற்று நிறைவேற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ். இத்திருப்பலியில் பங்குகொள்வதற்காக, இஞ்ஞாயிறு காலை ஆறு மணிக்கெல்லாம், பக்தர்கள் கூட்டம், வளாகத்தின் எல்லாப் பக்கங்களிலும் அலைமோதின.

இத்திருப்பலியை நிறைவுசெய்து பகல் 12 மணிக்கு, வத்திக்கான் பசிலிக்காவின் நடுமாடத்தில் நின்று, உரோம் நகருக்கும், உலகுக்குமென, ஊர்பி எத் ஓர்பி செய்தியும், சிறப்பு ஆசீரும் வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்நிகழ்வு, உலகின் ஏறக்குறைய அனைத்து நாடுகளுக்கும் நேரடி ஒலி-ஒளிபரப்பு செய்யப்பட்டது. அன்புச் சகோதரர், சகோதரிகளே, உங்கள் எல்லாருக்கும் இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழா நல்வாழ்த்துக்கள் என, தனது ஊர்பி எத் ஓர்பி செய்தியைத் தொடங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஊர்பி எத் ஓர்பி செய்தி வழங்கிய பின்னர், உரோம் நகருக்கும், உலகுக்கும், தனது சிறப்பு அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார் திருத்தந்தை. இந்த ஆசீரை, தகுந்த தயாரிப்போடும், பக்தியோடும் பெறுகின்றவர்களுக்குப் பரிபூரண பலன் உண்டு.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 April 2019, 14:10