இளையோர் சுற்றுலா மைய உறுப்பினர்களுக்கு உரையாற்றுகிறார் திருத்தந்தை இளையோர் சுற்றுலா மைய உறுப்பினர்களுக்கு உரையாற்றுகிறார் திருத்தந்தை 

இளையோர் சுற்றுலா மையத்தினர் சந்திப்பு

அருள்பணி கார்லோ கரேத்தோ அவர்கள், இளையோர் கத்தோலிக்க கழகத்துடன் சேர்ந்து, இளையோர் சுற்றுலா மையத்தை, எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் துவங்கினார்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

இளையோர் சுற்றுலா மையம் துவங்கப்பட்டதன் எழுபதாம் ஆண்டை முன்னிட்டு, அந்த மையத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் என, ஆயிரத்திற்கு அதிகமானவர்களை, மார்ச் 22, இவ்வெள்ளியன்று, புனித திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கில் சந்தித்து உரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இளையோர் கத்தோலிக்க கழகத்துடன் சேர்ந்து, அருள்பணி கார்லோ கரேத்தோ அவர்கள், எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் துவங்கிய இந்த மையம், முன்னெப்போதையும்விட, தற்போது மிகுந்த உயிரூக்கத்துடன் சேவையாற்றி வருகின்றது என்று பாராட்டினார், திருத்தந்தை பிரான்சிஸ்.  

இளையோர் சுற்றுலா மையம், மக்களுக்கிடையே சந்திப்பையும், நன்மதிப்பையும் ஊக்குவித்து வருகின்றது எனவும் பாராட்டிய திருத்தந்தை, ஒரு மனிதரின் ஒருங்கிணைந்த கண்ணோட்டம் என்பது, உலகிற்கும், பலவீனமான சகோதரர்களின்  உணர்வுகளுக்கும், இதயங்களைத் திறந்து வைப்பதாகும் என்றும் கூறினார்.

சுற்றுலாப்பயணம் மேற்கொள்ள இயலா நிலையிலுள்ள தங்கள் வயதையொத்த இளையோர்க்கு, பயணத்தில் உறுதுணையாய் இருக்குமாறு இளையோரிடம் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, திருஅவைக்குள்ளும், மனித சமுதாயத்திலும், கத்தோலிக்க உணர்வுடன் வாழுமாறு இளையோரிடம் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 March 2019, 15:10