தேடுதல்

லொரெட்டோவில் இளையோர் நடுவே திருத்தந்தை லொரெட்டோவில் இளையோர் நடுவே திருத்தந்தை 

அமைதி மற்றும் சகோதரத்துவத்தின் பாதையில் இளையோர் வழிநடக்க

திருத்தந்தை : மறைபோதக மறைசாட்சிகளின் நினைவு நாள், நம் விசுவாசத்திற்காக நாமும் மன உறுதியுடன் சான்றுபகர்வதற்குத் தேவையான நோக்கத்தைத் தருகிறது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

தன்னையே வழங்கும் கொடையாம் அன்பு, மற்றவர் மீது மரியாதை, பிறரை வரவேற்றலும் மன்னித்தலும் ஆகியவற்றை அடிபடையாகக் கொண்ட அமைதி, மற்றும் உடன்பிறந்த உணர்வுடன் கூடிய பாதையில், ஒவ்வொருவரும் வழிநடக்க, குறிப்பாக, இளையோர் வழிநடந்திட, அன்னை மரியா உதவுவாராக என, மார்ச் 25, இத்திங்களன்று, தன் டுவிட்டர் செய்தியில், வேண்டுதல் ஒன்றை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், மார்ச் 25ம் தேதி, இத்திங்களன்று, அடிமைத்தனத்தால் பாதிக்கப்பட்டோரின் நினைவுநாள் என்பதால், அக்கருத்தை மையப்படுத்தி, இரு டுவிட்டர் செய்திகளை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

நவீனகால அடிமைத்தனங்களால் பாதிக்கப்பட்ட மக்களை இன்றைய செபத்தில் நாம் நினைவுகூர்கிறோம். பாதிக்கப்பட்ட இவர்களின் துயர்கள், நாம் இந்த மனிதாபிமானமற்ற செயல்களுக்கு எதிராக போராடவேண்டியதை வலியுறுத்துகின்றன என தன் இரண்டாவது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார் திருத்தந்தை.

ஒவ்வொரு வாழ்வும் வரவேற்கப்படுவதற்கு தகுதியுடையவை, ஏனெனில் ஒவ்வோர் ஆணும் பெண்ணும் இயேசுவின் இரத்தத்தால் மீட்கப்பட தகுதியுடையவை. கடவுளால் பெருவாரியாக அன்புகூரப்பட்ட ஒன்றை நம்மால் வெறுத்து ஒதுக்க முடியாது, என்ற சொற்கள் திருத்தந்தையின் மூன்றாவது டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

மேலும், மார்ச் 24, இஞ்ஞாயிறன்று, திருஅவையில் சிறப்பிக்கப்பட்ட மறைபோதக மறைசாட்சிகளின் நினைவு நாள், நம் விசுவாசத்திற்காக நாமும் மன உறுதியுடன் சான்றுபகர்வதற்கான நோக்கத்தைத் தருகிறது என்ற டுவிட்டர் செய்தியை வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

'இன்று நாம் மறைபோதக மறைசாட்சியர் நாளை சிறப்பிக்கின்றோம். பகைமை மற்றும் வன்முறை மீது தன் அன்பால் நிரந்தர வெற்றி கண்ட இயேசுவின் மீது நாம் கொண்டிருக்கும் நம்பிக்கை மற்றும் நம் விசுவாசத்தின் உறுதியான சாட்சியத்திற்கு இந்நாள் ஒரு நோக்கத்தைத் தருகின்றது'  என்ற சொற்களை தன் ஞாயிறு டுவிட்டர் செய்தியாக வெளியிட்டார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 March 2019, 13:58