தேடுதல்

"இவ்வுலகின் பயண ஊர்தி" என்ற அமைப்பு "இவ்வுலகின் பயண ஊர்தி" என்ற அமைப்பு  

"இவ்வுலகின் பயண ஊர்தி" அமைப்பினர் சந்திப்பு

1945ம் ஆண்டு, ஆகஸ்ட் 6ம் தேதி, ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டினால் உருவான அழிவு நெருப்பை நினைவுறுத்தும் 'அமைதியின் சுடர்' என்ற தீபத்தை, பல்வேறு மதங்களைச் சேர்ந்த சிறுவர், சிறுமியர் திருத்தந்தையிடம் கொண்டு வந்தனர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

தவக்காலம், நம்மை இறைவனை நோக்கியும், விண்ணகத்தை நோக்கியும் அழைத்துச் செல்லும் ஆவலைத் தூண்டும் காலம் என்ற கருத்துடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மார்ச் 20, இப்புதனன்று தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டார்.

"இறைவனுக்காகவும், விண்ணகத்தின் நித்தியத்திற்காகவும் எப்போதும் பற்றியெரியும் சுடருக்காக நாம் உருவாக்கப்பட்டுள்ளோம், இவ்வுலகிற்காக அல்ல என்பதை மீண்டும் கண்டுகொள்வதே தவக்காலம்" என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

மேலும், மார்ச் 20, இப்புதனன்று, திருத்தந்தையின் மறையுரையைக் கேட்க, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் கூடியிருந்தோரில், "The Caravan of the Earth" அதாவது, "இவ்வுலகின் பயண ஊர்தி" என்ற அமைப்பைச் சேர்ந்தவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சந்தித்தார்.

இவ்வுலகில் அணு ஆயுதங்களை ஒழித்து அமைதியை உருவாக்க, 2015ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இவ்வமைப்பினைச் சேர்ந்தவர்கள், 'அமைதியின் சுடர்' என்ற பெயரில் ஒரு தீபத்தை ஏந்தி வந்திருந்தனர்.

1945ம் ஆண்டு, ஆகஸ்ட் 6ம் தேதி, ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டினால் உருவான அழிவு நெருப்பை நினைவுறுத்தும் இந்த தீபத்தை, பல்வேறு மதங்களைச் சேர்ந்த சிறுவர், சிறுமியர் கொணர்ந்தனர் என்பதும், உலகில் அனைத்து அழிவு நெருப்பும் ஒழிந்து, அமைதி உருவாகவேண்டும் என்பதை வலியுறுத்த, இந்த தீபத்தை, அச்சிறுவர், சிறுமியருடன் இணைந்து, திருத்தந்தை அணைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 March 2019, 14:57