திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் மத்திய ஆப்ரிக்கக் குடியரசின் அரசுத்தலைவர், Faustin Archange Touadéra திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் மத்திய ஆப்ரிக்கக் குடியரசின் அரசுத்தலைவர், Faustin Archange Touadéra 

திருத்தந்தையுடன் மத்திய ஆப்ரிக்கக் குடியரசுத் தலைவர்

மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் திறக்கப்பட்டுள்ள குழந்தைகள் மருத்துவமனைக்காக, அரசுத்தலைவர் Touadéra அவர்கள், திருத்தந்தைக்கு, தன் சிறப்பான நன்றியைத் தெரிவித்தார்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மார்ச் 5ம் தேதி, இச்செவ்வாய் மாலையில், மத்திய ஆப்ரிக்கக் குடியரசின் அரசுத்தலைவர், Faustin Archange Touadéra அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார்.

அண்மையில் மத்திய ஆப்ரிக்கக் குடியரசின் தலைநகர் பாங்கியில் திருப்பீடமும், குழந்தை இயேசு மருத்துவமனையும் இணைந்து துவங்கியுள்ள குழந்தைகள் மருத்துவமனைக்காக அரசுத்தலைவர் Touadéra அவர்கள், திருத்தந்தைக்கு, தன் சிறப்பான நன்றியைத் தெரிவித்தார்.

மேலும், இரு நாடுகளுக்கிடையில் நிலவும் நல்லுறவுகள் குறித்தும், மத்திய ஆப்ரிக்கக் குடியரசுக்காக தலத்திருஅவை ஆற்றிவரும் கல்வி, மற்றும் நலவாழ்வு பணிகள் குறித்தும், இச்சந்திப்பில் பேசப்பட்டது.

திருத்தந்தையுடன் நிகழ்ந்த இச்சந்திப்பைத் தொடர்ந்து, திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களையும், திருப்பீட பன்னாட்டு உறவுகள் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் அவர்களையும் அரசுத்தலைவர் Touadéra அவர்கள் சந்தித்துப் பேசினார்.

இச்சந்திப்பின்போது, திருப்பீடத்திற்கும், மத்திய ஆப்ரிக்கக் குடியரசுக்கும் இடையே அதிகாரப்பூர்வமாக நிலவிவரும் ஒப்பந்தங்கள் மீண்டும் ஒருமுறை புதுப்பிக்கப்பட்டன என்று வத்திக்கான் செய்தித்துறை அறிவித்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 March 2019, 14:44