தேடுதல்

தியானத்தை வழிநடத்திய அருள்பணியாளர் பெர்னார்தோ ஜியான்னி அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும், திருத்தந்தை பிரான்சிஸ் தியானத்தை வழிநடத்திய அருள்பணியாளர் பெர்னார்தோ ஜியான்னி அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும், திருத்தந்தை பிரான்சிஸ் 

தியான உரை வழங்கிய அருள்பணியாளருக்கு திருத்தந்தை நன்றி

திருத்தந்தையும், திருப்பீடத்தின் பல்வேறு துறைகளின் பொறுப்பாளர்களும் மார்ச் 10, இஞ்ஞாயிறன்று தொடங்கிய இத்தியானம், மார்ச் 15, இவ்வெள்ளிக்கிழமை முடிவுற்றுள்ளது

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், திருப்பீடத்தின் பல்வேறு துறைகளின் பொறுப்பாளர்களும், அரிச்சா தெய்வீகப் போதகர் தியான இல்லத்தில், மேற்கொண்டு வந்த தவக்காலத் தியானத்தை, மார்ச் 15, இவ்வெள்ளிக்கிழமை முற்பகலில் நிறைவு செய்து, வத்திக்கான் திரும்பியுள்ளனர்.

இவ்வெள்ளிக்கிழமை காலை பத்து மணிக்குத் தொடங்கிய கடைசி தியான உரையில்,  இத்தியானத்தை வழிநடத்திய புனித பெனடிக்ட் துறவு சபையின் அருள்பணியாளர் பெர்னார்தோ ஜியான்னி அவர்களுக்கு நன்றி தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கடவுள் மனிதரில் பிரசன்னமாய் இருப்பதைப் புரிந்துகொள்வதற்கு, இத்தியான நாள்கள் உதவின என்றும், மனிதஉரு எடுத்த இறைவார்த்தை போன்று, நாங்களும் மனிதரில் நுழைவதற்கு, தியானச் சிந்தனைகள் உதவியுள்ளன என்றும் கூறியத் திருத்தந்தை, கடவுள் எப்போதும் மனிதரில் பிரசன்னமாய் இருக்கிறார் என்பதை புரிந்துகொள்வதற்கும், இந்நாள்கள் உதவின என்றும் தெரிவித்தார்.

நினைவு, நம்பிக்கை, மற்றும் பொறுமை பற்றிய சிந்தனைகளை வழங்கியதற்கு நன்றி என தெரிவித்த திருத்தந்தை, இன்றும்கூட அதிக எதிர்ப்புகளை எதிர்நோக்கி வருகின்ற, Gaudium et Spes அதாவது மகிழ்வும் எதிர்நோக்கும் என்ற தொகுப்பில் கையெழுத்திட்டபோது பொதுச்சங்கத் தந்தையர் கொண்டிருந்த அதே துணிச்சலை, அருள்பணி பெர்னார்தோ அவர்களிடம் தான் பார்த்ததாகத் தெரிவித்தார்.

ஆண்டவருக்குப் பணியாற்றும் பாதையில் முன்னோக்கிச் செல்வதற்கு நாங்கள் விரும்புகின்றோம். பாவிகளாகிய எங்களுக்காகச் செபியுங்கள் என்றும் கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அருள்பணியாளர் ஜியான்னி அவர்களின் பெனடிக்ட் சபை துறவிகளுக்கு, தனது நல்வாழ்த்தையும் தெரிவித்தார்.

மார்ச் 10, இஞ்ஞாயிறன்று தொடங்கிய இத்தியானம், மார்ச் 15, இவ்வெள்ளிக்கிழமை முடிவுற்றுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 March 2019, 15:27