திருத்தந்தை 12ம் பயஸ் திருத்தந்தை 12ம் பயஸ்  

திருத்தந்தை 12ம் பயஸ் - 80 வருட தலைமைப்பணி நிறைவு

திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள், 1939ம் ஆண்டு மார்ச் 12ம் தேதியிலிருந்து, 1958ம் ஆண்டு அக்டோபர் 9ம் தேதி, அவர் இறக்கும்வரை, திருஅவையை வழிநடத்தினார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள், கத்தோலிக்கத் திருஅவையின் தலைமைப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட எண்பதாம் ஆண்டு, மார்ச் 12, இச்செவ்வாயன்று நிறைவடைகின்றது

இத்தாலிய கர்தினாலாகிய Eugenio Pacelli அவர்கள், எண்பது ஆண்டுகளுக்கு முன்னர், 1939ம் ஆண்டு மார்ச் 12ம் நாளன்று, திருஅவையின் 260வது திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, திருத்தந்தை 12ம் பயஸ் என்ற பெயரையும் தெரிந்துகொண்டார்.

திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள், 1939ம் ஆண்டு மார்ச் 12ம் தேதியிலிருந்து, 1958ம் ஆண்டு அக்டோபர் 9ம் தேதி ,அவர் இறக்கும்வரை, திருஅவையை வழிநடத்தினார்.

திருத்தந்தை 12ம் பயஸ் அவர்களை புனிதர் நிலைக்கு உயர்த்துவதற்கான நடவடிக்கைகள், புனித திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்களால் 1965ம் ஆண்டு நவம்பர் 18ம் நாள், இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் இறுதி அமர்வில் தொடங்கப்பட்டது. 

திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள், வணக்கத்துக்குரியவர் என, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், 2009ம் ஆண்டு டிசம்பர் 19ம் நாளன்று அறிவித்தார்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 March 2019, 15:39