தேடுதல்

IFAD நிறுவனத்திற்கு திருத்தந்தை வழங்கிய நினைவுப் பரிசு IFAD நிறுவனத்திற்கு திருத்தந்தை வழங்கிய நினைவுப் பரிசு 

IFAD நிறுவனத்திற்கு திருத்தந்தை வழங்கிய நினைவுப் பரிசு

"கிராமப்புறங்களில் வாழ்வோருக்கு ஆதரவாக, IFAD நிறுவனம் மேற்கொண்டு வரும் முயற்சிகளை நான் பாராட்டுகிறேன். அவர்களுக்காக என் செபங்கள் தொடர்கின்றன" – திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

வத்திக்கானில் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்திலிருந்து, பிப்ரவரி 14, இவ்வியாழன் காலை 8.45 மணிக்கு, காரில் புறப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் நகரில் அமைந்துள்ள உணவு மற்றும் வேளாண்மை நிறுவனமான FAOவின் தலைமையகத்தை காலை 9 மணியளவில் சென்றடைந்தார்.

அந்நிறுவனத்தின் பார்வையாளர்கள் பதிவேட்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஸ்பானிய மொழியில் ஒரு சில வார்த்தைகளை, தன் வாழ்த்துச் செய்தியாக பதிவு செய்தார்.

"கிராமப்புறங்களில் வாழ்வோருக்கு ஆதரவாக, IFAD நிறுவனம் மேற்கொண்டு வரும் முயற்சிகளை நான் பாராட்டுகிறேன். அவர்களுக்காக என் செபங்கள் தொடர்கின்றன" என்ற சொற்களை திருத்தந்தை இந்த பதிவேட்டில் கைப்பட எழுதி கையொப்பமிட்டார்.

மேலும், பாறையில் செதுக்கப்பட்ட ஓர் உருவச்சிலையை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், IFAD நிறுவனத்திற்கு நினைவுப் பரிசாக அளித்தார்.

பாறையிலிருந்து வெளிப்புறமாக நீண்டிருக்கும் இரு கரங்கள் கட்டப்பட்ட நிலையில் இருப்பதுபோல் வடிவமைக்கப்பட்ட இந்தக் கற்சிலை உருவத்திற்கு, "இதோ மனிதன்" என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அர்ஜென்டீனா நாட்டின் நோர்மா டி'இப்போலிட்டோ (Norma D'Ippolito) என்ற சிற்பி, 2013ம் ஆண்டு, இச்சிலையை உருவாக்கினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 February 2019, 15:17