தேடுதல்

திருத்தந்தையுடன் ஐக்கிய அரபு அமீரக வெளியுறவு அமைச்சர் Sheik Abdallah Bin Zayed Al Nahyan திருத்தந்தையுடன் ஐக்கிய அரபு அமீரக வெளியுறவு அமைச்சர் Sheik Abdallah Bin Zayed Al Nahyan 

திருத்தந்தை, ஐக்கிய அரபு அமீரக வெளியுறவு அமைச்சர் சந்திப்பு

ஐக்கிய அரபு அமீரக வெளியுறவு அமைச்சர் தலைமையில் திருத்தந்தையைச் சந்தித்த பிரதிநிதிகள் குழு, அன்பு, சகிப்புத்தன்மை மற்றும் உடன்பிறந்த உணர்வை வெளிப்படுத்தும் செய்திகள் எழுதப்பட்ட சில விலையுயர்ந்த கற்களை திருத்தந்தைக்கு வழங்கியது. இந்த எழுத்துக்கள், அரபு மொழியில் பொறிக்கப்பட்டிருந்தன

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

வத்திக்கானில் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தில், பிப்ரவரி 25, இத்திங்கள் 12.30 மணியளவில், ஐக்கிய அரபு அமீரக வெளியுறவு அமைச்சர் Sheik Abdallah Bin Zayed Al Nahyan அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்து கலந்துரையாடினார் என்று, திருப்பீட இடைக்கால செய்தித் தொடர்பாளர், Alessandro Gisotti அவர்கள் அறிவித்தார்.

திருத்தந்தையின் அபுதாபி திருத்தூதுப்பயணத்தில் (பிப்.3-5,2019) கையெழுத்திடப்பட்ட, உலக அமைதிக்கும், பொதுவான நல்லிணக்க வாழ்வுக்கும் மனித உடன்பிறப்பு நிலை என்ற ஏட்டின் கூறுகளை, ஐக்கிய அரபு அமீரகம் அமல்படுத்தி வருவது குறித்து Bin Zayed அவர்கள், திருத்தந்தையிடம் விளக்கினார் எனவும் கூறினார்,ஜிசோத்தி.

தூய பேதுரு வளாகம் கட்டப்பட்டது குறித்து விளக்கும் 17ம் நூற்றாண்டு ஓவியம் ஒன்றையும், ஐக்கிய அரபு அமீரகத் திருத்தூதுப் பயணத்தில் எடுக்கப்பட்ட, அரசுத்தலைவர், உதவி அரசுத்தலைவர் ஆகியோரின் நான்கு பெரிய புகைப்படங்களையும் திருத்தந்தை பரிசாக அளித்தார்.

இச்சந்திப்பு முடிந்து, Bin Zayed அவர்களுடன் மதிய உணவருந்தினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 February 2019, 15:27