தேடுதல்

Vatican News
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒரு உறுப்பினரான துபாயில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உருவம் வைக்கப்பட்டுள்ள புனித மரியா கத்தோலிக்க கோவில் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒரு உறுப்பினரான துபாயில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உருவம் வைக்கப்பட்டுள்ள புனித மரியா கத்தோலிக்க கோவில்  (AFP or licensors)

ஐக்கிய அமீரகத் திருத்தூதுப் பயணம் வரலாற்று முக்கியத்துவம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் வாரிசு இளவரசர் Sheikh Mohammed bin Zayed bin Sultan Al-Nahyan அவர்கள், ‘மனித உடன்பிறந்த நிலை’ என்ற தலைப்பில், இரண்டு நாள் பன்னாட்டு கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளார்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின், ஐக்கிய அரபு அமீரகத் திருத்தூதுப் பயணம், வரலாற்று முக்கியத்துவம் பெற்றது என்று, EU எனப்படும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

திருத்தந்தையின் இத்திருத்தூதுப் பயணம் குறித்து CNA செய்திக்குப் பேட்டியளித்த, ஐரோப்பிய ஒன்றியத்தில், சமய சுதந்திரத்தை ஊக்குவிப்பதற்குப் பணியாற்றும் சிறப்பு தூதர் Jan Figel அவர்கள், இவ்வாறு கூறினார்.

உலகில் இரண்டாவது பெரிய மதத்தின் பிரதிநிதிகள் மற்றும், மக்களின் பொறுப்புணர்வை ஆழப்படுத்தவும், ஏற்கனவே இடம்பெற்றுவரும் பல்சமய கலந்துரையாடலை வலுப்படுத்தவும், இத்திருத்தூதுப் பயணம் உதவும் என்றும், Figel அவர்கள், கூறினார்.

அபு தாபியில், ‘மனித உடன்பிறந்த நிலை’ என்ற தலைப்பில் நடைபெறும் பன்னாட்டு கருத்தரங்கு, பல்வேறு மதங்களின் மற்றும், சமுதாயங்களின் தலைவர்களை ஒன்றுசேர்க்கும் என்றும், மனித உடன்பிறந்த நிலைக்கு’ நம்பிக்கைக்குரிய தலைவர்கள் தங்களின் எடுத்துக்காட்டு மற்றும் அர்ப்பணத்தை வெளிப்படுத்தும்போது, பன்மைத்தன்மையில் அமைதியான நல்லிணக்கத்திற்குப் பெரும் பங்காற்றும் என்றும், Figel அவர்கள், கூறினார்.

‘மனித உடன்பிறந்த நிலையின் கொள்கைகள்’, ‘மனித உடன்பிறந்த நிலையை எட்டுவதற்குப் பொதுவான பொறுப்புணர்வு’, ‘மனித உடன்பிறந்த நிலை - சவால்களும் வாய்ப்புகளும்’ ஆகிய மூன்று தலைப்புகளில் இக்கருத்தரங்கு நடைபெறுகின்றது.

குடியுரிமை பற்றிய கருத்தாக்கம் மற்றும் இனத் தீவிரவாதம் குறித்தும் இக்கருத்தரங்கில் விவாதிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. (CNA)

02 February 2019, 15:46