தேடுதல்

நோயுற்ற குழந்தையின் கரங்களை முத்தமிடும் திருத்தந்தை பிரான்சிஸ் நோயுற்ற குழந்தையின் கரங்களை முத்தமிடும் திருத்தந்தை பிரான்சிஸ் 

அன்பை மையப்படுத்தி திருத்தந்தையின் டுவிட்டர் செய்திகள்

"மற்றவர்கள், பிரச்சனைகளைக் காணும் இடங்களில், அன்பு செய்வோர், தங்கள் கற்பனையைப் பயன்படுத்தி, தீர்வுகளைக் கண்டுபிடிக்கின்றனர்." - திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

"உண்மை, இறை தந்தையின் முகத்தைக் காட்டும் அற்புதமான வெளிப்பாடு. அது, அவரது அளவற்ற அன்பு" என்ற சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிப்ரவரி 15 இவ்வெள்ளியன்று தன் டுவிட்டர் செய்தியாக வெளியிட்டார்.

மேலும், உரோம் நகருக்கு வெளியே, Sacrofano எனுமிடத்தில் அமைந்துள்ள Fraterna Domus என்ற துறவு இல்லத்தில், "அச்சத்திலிருந்து விடுதலை பெற்று" என்ற தலைப்பில் நடைபெறும் ஒரு கருத்தரங்கின் நிறைவுத் திருப்பலியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளி மாலை 4 மணியளவில் நிறைவேற்றுகிறார்.

பிப்ரவரி 14, இவ்வியாழனன்று, IFAD என்றழைக்கப்படும் 'வேளாண்மை முன்னேற்றத்திற்கு பன்னாட்டு நிதி' என்ற நிறுவனத்தின் உயர்நிலைப் பொறுப்பாளர்களின் 42வது பன்னாட்டு மாநாட்டிலும், இந்நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பன்னாட்டு பழங்குடியினர் கூட்டத்திலும் உரைகள் வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்நிறுவனத்தின் முயற்சிகளை மனதில் கொண்டு, தன் டுவிட்டர் செய்தியை, பதிவு செய்திருந்தார்.

திருத்தந்தையின் டுவிட்டர் பதிவு, அன்பு செய்வோரைக் குறித்து பேசியிருப்பது, அன்பை மையப்படுத்தி, பிப்ரவரி 14ம் தேதி சிறப்பிக்கப்படும் வேலன்டைன் நாளையும் நினைவுக்குக் கொணர்ந்தது.

"மற்றவர்கள், பிரச்சனைகளைக் காணும் இடங்களில், அன்பு செய்வோர், தங்கள் கற்பனையைப் பயன்படுத்தி, தீர்வுகளைக் கண்டுபிடிக்கின்றனர். பிறர் மீது அன்பு கொள்வோர், மற்றவர்களைக் குறித்து தாங்கள் கொண்டிருக்கும் முற்சார்பு எண்ணங்களின் அடிப்படையில் அல்லாமல், அவர்களது உண்மையான தேவைகளுக்கு, படைப்பாற்றலுடன் உதவி செய்கின்றனர்" என்ற சொற்களை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் டுவிட்டர் செய்தியாக வெளியிட்டிருந்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 February 2019, 14:07