தேடுதல்

Vatican News
திருத்தந்தையின் மூவேளை செப உரைS திருத்தந்தையின் மூவேளை செப உரை  (AFP or licensors)

குற்றங்கள் களையப்பட செபம் வழியாக உதவுவோம்

இன்றையத் திருஅவையின் மிகப்பெரும் சவால்களுள் ஒன்றாகிய சிறியோர் பாலியல் முறைகேடுகள் குறித்து விவாதிக்க உள்ள உலக ஆயர் பேரவைத் தலைவர்கள் கூட்டம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருஅவை அதிகாரிகளால், சிறியோர் பாலியல்  முறைகேடுகளுக்கு உள்ளாக்கப்பட்டது குறித்து, உலக நாடுகளின் ஆயர் பேரவைத் தலைவர்களுடன், வத்திக்கானில், இவ்வாரம் நடைபெறவுள்ள கூட்டத்திற்காக செபிக்கவேண்டும் என, அனைத்து விசுவாசிகளுக்கும் விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இம்மாதம் 21 முதல் 24 முடிய உலக ஆயர் பேரவைகளின் தலைவர்கள், வத்திக்கானில் கூடி விவாதிக்கவுள்ளதையொட்டி, விசுவாசிகளின் செபங்களுக்கு, இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையின் இறுதியில் அழைப்பு விடுத்தார் திருத்தந்தை.

நம் காலத்தின் இந்த அவசர சவால் குறித்து திருஅவையின் மேய்ப்புப்பணி பொறுப்புணர்வை வெளிப்படுத்தும் இந்த கூட்டத்திற்கு, உலக கத்தோலிக்கர்களின் செபம் தேவை என உரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உலக ஆயர் பேரவைகளின் தலைவர்களுடன் வத்திக்கானில் இடம்பெற உள்ள இந்த நான்கு நாள் கூட்டம், திருஅவையின் பொறுப்புணர்வுகள், குற்றங்களை ஏற்றல், ஆயர்களின் வெளிப்படைத்தன்மை ஆகியவை குறித்து விவாதிப்பதுடன், முறைகேடுகளுக்கு உள்ளாக்கப்பட்டோரின் அனுபவப் பகிர்வுகள், திருப்பலி, பாவமன்னிப்பு வழிபாடு ஆகியவற்றையும் உள்ளடக்கியதாக இருக்கும்.

17 February 2019, 12:55