தேடுதல்

Camerlengo பொறுப்பில் திருத்தந்தையால் நியமிக்கப்பட்ட கர்தினால் கெவின் ஜோசப் ஃபாரெல் Camerlengo பொறுப்பில் திருத்தந்தையால் நியமிக்கப்பட்ட கர்தினால் கெவின் ஜோசப் ஃபாரெல் 

கர்தினால் கெவின் ஜோசப் ஃபாரெல் – புதிய Camerlengo

Camerlengo பொறுப்பில் பணியாற்றுபவர், திருத்தந்தையின் மரணத்தையடுத்து, திருஅவையின் தற்காலிக பொறுப்பை ஏற்பதோடு, அடுத்தத் திருத்தந்தையைத் தெரிவு செய்யும் 'கான்கிளேவ்' கூட்டத்திற்கு ஏற்பாடு செய்வதும் இவரது பொறுப்பு.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

புனித உரோமையத் திருஅவையின் முக்கியப் பொறுப்புக்களில் ஒன்றான, Camerlengo என்ற பொறுப்பில் பணியாற்ற, பொதுநிலையினர், குடும்பம் மற்றும் வாழ்வு திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் கெவின் ஜோசப் ஃபாரெல் அவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிப்ரவரி 14, இவ்வியாழனன்று நியமித்துள்ளார்.

Camerlengo பொறுப்பில் பணியாற்றுபவர், பாப்பிறை இல்லத்தின் அனைத்து சொத்துக்களையும் பாராமரிப்பவர்.

திருத்தந்தை ஒருவர் மரணமடைந்ததும், அதனை உறுதி செய்து, இறந்த திருத்தந்தை அணிந்திருந்த மோதிரத்தை, ஏனைய கர்தினால்கள் முன்னிலையில் உடைத்து, அத்திருத்தந்தையின் தலமைப் பொறுப்பு முடிவுக்கு வந்ததென்று அறிவிப்பது, Camerlengoவின் கடமை.

மேலும், திருத்தந்தையின் மரணத்தையடுத்து, Camerlengo பொறுப்பில் பணியாற்றுபவர், திருஅவையின் தற்காலிக பொறுப்பை ஏற்று செயலாற்றுவதோடு, அடுத்தத் திருத்தந்தையைத் தெரிவு செய்யும் 'கான்கிளேவ்' எனப்படும் கர்தினால்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்வதும் இவரது பொறுப்பு.

2013ம் ஆண்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருஅவையின் தலைமைப் பொறுப்பை ஏற்றபின், பல்சமய உரையாடல் திருப்பீட அவையின் தலைவராகப் பணியாற்றிய கர்தினால் Jean-Louis Tauran அவர்களை, Camerlengo பொறுப்பில் பணியாற்ற, திருத்தந்தை 2014ம் ஆண்டு நியமித்தார்.

2018ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி கர்தினால் Tauran அவர்கள் இறையடி சேர்ந்தததையடுத்து, கடந்த 8 மாதங்களாக காலியாக இருந்த இப்பொறுப்பில் பணியாற்ற, கர்தினால் ஃபாரெல் அவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நியமித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 February 2019, 15:13