தேடுதல்

Vatican News
பிப்ரவரி 3 ஞாயிறன்று திருத்தந்தை வழங்கிய மூவேளை செப உரையின் இறுதியில்.... பிப்ரவரி 3 ஞாயிறன்று திருத்தந்தை வழங்கிய மூவேளை செப உரையின் இறுதியில்....  (Vatican Media)

திருத்தந்தையின் மூவேளை செப உரை

இன்றைய உலகில், இயேசுவை உண்மையாகப் பின்பற்றும் சீடர்கள், புதுமைகளை அல்ல, நம்பிக்கையை தங்கள் வாழ்வின் அடித்தளமாகக் கொண்டு செயல்படுகின்றனர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஆண்டவரின் ஆவி தன் மீது இறங்கி செயல்படுகிறார் என்று இயேசு கூறிய வேளையில், அவர் தங்கள் நடுவே, புதுமைகள் செய்யவேண்டும் என்று நாசரேத்து மக்கள் வலியுறுத்தினர் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறு வழங்கிய மூவேளை செப உரையில் கூறினார்.

வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான விசுவாசிகளுக்கு நண்பகல் மூவேளை செப உரை வழங்கியத் திருத்தந்தை, இந்த ஞாயிறு வழங்கப்பட்ட நற்செய்தியை (லூக்கா 4:21-30) மையப்படுத்தி, தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

இறைவன், நாசரேத்து மக்களிடம் நம்பிக்கையை எதிர்பார்க்கிறார், அவர்களோ, அவரிடம் புதுமைகளை எதிர்பார்க்கின்றனர்; இறைவன் அனைவரையும் மீட்க விழைகிறார், அவர்களோ, மீட்பர் தங்களுக்கு மட்டுமே உரியவர் என்று கூறுகின்றனர் என்று, திருத்தந்தை தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

இன்றைய உலகில், இயேசுவை உண்மையாகப் பின்பற்றும் சீடர்கள், புதுமைகளை அல்ல, நம்பிக்கையை தங்கள் வாழ்வின் அடித்தளமாகக் கொண்டு செயல்படுகின்றனர் என்றும், அவர்கள், எவ்வித பாகுபாடுமின்றி, அனைவருக்கும் பணியாற்றுகின்றனர் என்றும், திருத்தந்தை எடுத்துரைத்தார்.

04 February 2019, 13:42