தேடுதல்

இளையோர் நாள் நிகழ்வுக்கு வந்த முதல் குழுவை வரவேற்ற பானமா அரசுத் தலைவர் இளையோர் நாள் நிகழ்வுக்கு வந்த முதல் குழுவை வரவேற்ற பானமா அரசுத் தலைவர் 

பானமா நாட்டுக்குக் கிடைத்த பெரும் பேறு - அரசுத்தலைவர்

உலக இளையோர் நாள் நிகழ்வுகளை நடத்துவதன் வழியே, நாடுகளுக்கிடையிலும், கலாச்சாரங்களுக்கிடையிலும், பாலமாகச் செயல்படும் வாய்ப்பு, பானாமாவுக்குக் கிடைத்துள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை பானமா நாட்டில் வரவேற்பது, அந்நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சிதரும் செய்தி மட்டுமல்ல, தங்களுக்கு கிடைத்த மாபெரும் பெருமை அது என்று கூறினார், பானமா அரசுத்தலைவர், யுவான் கார்லோஸ் வரேலா ரொட்ரிகுவெஸ்.

விசுவாசத்தோடும், நம்பிக்கையோடும் வாழும், சிறு நாடான பானமா நாட்டு மக்களிடம், உலக இளையோர் நாள் நிகழ்வுகளை நடத்தும்படி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒப்படைத்தது, தங்களுக்குக் கிடைத்த பெரும் பேறு என்று அரசுத்தலைவர் ரொட்ரிகுவெஸ் அவர்கள், வத்திக்கான் செய்திகளுக்கு அளித்த பேட்டியொன்றில் கூறினார்.

பானமா நாட்டில், முதல் கத்தோலிக்க மறைமாவட்டம் உருவாக்கப்பட்டதன் 500ம் ஆண்டைச் சிறப்பிக்க, 2009ம் ஆண்டுமுதலே தயாரிப்புகள் இடம்பெற்றுவரும் வேளையில், திருத்தந்தை தற்போது வரவிருப்பது, பெரும் மகிழ்ச்சி தரும் நற்செய்தி என்று அரசுத்தலைவர் தன் பேட்டியில் மேலும் கூறினார்.

உலக இளையோர் நாள் நிகழ்வுகளை நடத்துவதன் வழியே, நாடுகளுக்கிடையிலும், கலாச்சாரங்களுக்கிடையிலும் மீண்டும் ஒருமுறை பாலமாகச் செயல்படும் வாய்ப்பு, பானாமாவுக்குக் கிடைத்துள்ளது என்பதை, அரசுத்தலைவர் ரொட்ரிகுவெஸ் அவர்கள் மகிழ்ச்சியுடன் கூறினார்.

நம்பிக்கை, ஒன்றிப்பு, ஒருமைப்பாடு மற்றும் உதவி தேவைப்படுவோர் மீது அக்கறை என்ற செய்திகள் உலகமெங்கும் சென்றடைவதற்கு, பானமா நாடு, அடுத்த சில நாள்கள் ஒரு மையமாகச் செயல்பட உள்ளது என்பதைக் குறித்து, இந்நாட்டின் குடிமகன் என்ற முறையில் தான் பெருமை அடைவதாகவும், பானமா அரசுத்தலைவர் ரொட்ரிகுவெஸ் அவர்கள் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 January 2019, 15:23