தேடுதல்

மொராக்கோ திருத்தூதுப்பயண இலச்சினை மொராக்கோ திருத்தூதுப்பயண இலச்சினை 

மொராக்கோ திருத்தூதுப்பயண இலச்சினை

மொராக்கோ திருத்தூதுப்பயண இலச்சினையில், கிறிஸ்தவத்தைக் குறிக்கும் விதமாக ஒரு சிலுவையும், இஸ்லாமைக் குறிக்கும் விதமாக ஒரு பிறையும் உளளன

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மொராக்கோ நாட்டிற்கு மேற்கொள்ளவிருக்கும் திருத்தூதுப்பயண இலச்சினையை வெளியிட்டுள்ளது, திருப்பீடம்.

“நம்பிக்கை பணியாளர்” என்ற தலைப்பில், வருகிற மார்ச் 30 மற்றும், 31 ஆகிய இரு நாள்களில், திருத்தந்தை, மொராக்கோ நாட்டிற்கு, திருத்தூதுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

மொராக்கோ அரசர் 4ம் முகமது மற்றும் அந்நாட்டின் ஆயர்களின் அழைப்பின்பேரில், திருத்தந்தை அந்நாட்டிற்குச் செல்லவுள்ளார். முஸ்லிம் நாடான மொராக்கோவில், Rabat, Casablanca ஆகிய இரு நகரங்களில் திருத்தந்தையின் பயண நிகழ்வுகள் இடம்பெறும்.

திருத்தந்தையின் மொராக்கோ திருத்தூதுப்பயண இலச்சினை பற்றி அறிவித்த திருப்பீட செய்தித் தொடர்பகம், ஏறத்தாழ ஐம்பது இலச்சினைகள் தேர்வுக்கென வந்தன என்றும், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த இலச்சினையில், கிறிஸ்தவத்தைக் குறிக்கும் விதமாக ஒரு சிலுவையும், இஸ்லாமைக் குறிக்கும் விதமாக ஒரு பிறையும் உளளன, இவை, கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையேயுள்ள பல்சமய உறவைக் கோடிட்டு காட்டுவதாக உள்ளன என்றும் கூறியது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மொராக்கோ நாட்டில், அந்நாட்டு முஸ்லிம்களின் தலைவரைச் சந்திக்கவுள்ளார். புனித அசிசி நகர் பிரான்சிஸ் அவர்களுக்கும், எகிப்தின் சுல்தான் Al-Malik al-Kāmil அவர்களுக்கும் இடையே சந்திப்பு இடம்பெற்ற 800 ஆண்டுகளுக்குப் பின்னர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இத்தகைய தலைவரைச் சந்திக்கவுள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த இலச்சினையில், வத்திக்கான் மற்றும் மொராக்கோ நாடுகளின் கொடிகளின் நிறங்களும் உள்ளன. திருத்தந்தையை வரவேற்கும் நாட்டிற்கு மதிப்பளிக்கும் விதமாக, இந்த இலச்சினையில்,"மொராக்கோ" என அராபிய மொழியில் எழுதப்பட்டுள்ளது.

மேலும், மொராக்கோ திருத்தூதுப்பயணம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் 26வது வெளிநாட்டுப் பயணமாக அமையும். வருகிற பிப்ரவரி 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை,  ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் திருத்தந்தை திருத்தூதுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 January 2019, 15:40