தேடுதல்

மூவேளை செப உரை மூவேளை செப உரை 

அமைதிக்காக எடுக்கப்படும் முயற்சிகளுக்கு நன்றி

52வது உலக அமைதி நாளில், நாம் எல்லாரும் அமைதிக்காகச் செபிப்போம், இன்று மட்டுமல்ல, எல்லா நாள்களிலும் செபிப்போம்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

இந்த உலக அமைதி நாளில், உலகின் பல்வேறு பகுதிகளில், தலத்திருஅவை குழுக்களால், அமைதிக்காக நடத்தப்பட்ட எண்ணற்ற முயற்சிகள் மற்றும் செபங்களுக்கு, நன்றி தெரிவிப்பதாக, மூவேளை செப உரையின் இறுதியில் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

‘இப்பூமியெங்கும் அமைதி’ என்ற தலைப்பில், இந்த உலக அமைதி நாளில், உரோம் எஜிதியோ பிறரன்பு அமைப்பு நடத்திய பேரணியில், பங்கு கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்த திருத்தந்தை, நாம் எல்லாரும், அமைதியின் கருவிகளாக மாறுவதற்கு, அன்னை மரியின் பரிந்துரையை இறைஞ்சுவோம் எனவும் கூறினார்.

வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில், டிசம்பர் 01, இச்செவ்வாய் நண்பகலில் கூடியிருந்த பெருமளவான மக்களைப் பார்த்து, புனிதர் பட்டமளிப்பு விழாவுக்குக் கூடும் விசுவாசிகள் திரள் போன்று, இம்மக்கள்திரள் இருக்கின்றது என்று பாராட்டிய திருத்தந்தை, தனக்காகச் செபிக்க மறக்க வேண்டாமெனக் கேட்டுக்கொண்டார்.

இத்தாலிய அரசுத்தலைவர் தனக்கு அனுப்பியிருந்த வாழ்த்துக்குச் சிறப்பாக நன்றி தெரிவித்த, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைத்து இத்தாலிய மக்களை இறைவன் ஆசீர்வதிக்குமாறு செபித்தார்.

52வது உலக அமைதி நாளான இன்று, நாம் எல்லாரும், அமைதிக்காகச் செபிப்போம், இன்று மட்டுமல்ல, எல்லா நாள்களிலும் அமைதிக்காகச் செபிப்போம் என்றுரைத்து, உரோம் மக்களுக்கும், உலகினர் அனைவருக்கும், உடன்பிறப்பு உணர்வுகொண்ட நல்வாழ்த்தைத் தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 January 2019, 15:11