தேடுதல்

திருத்தந்தையின் டுவிட்டர் செய்திகள் வெளியாகும் சமூக வலைத்தளம் திருத்தந்தையின் டுவிட்டர் செய்திகள் வெளியாகும் சமூக வலைத்தளம் 

அன்பு என்பது, ஒருவர் தனது இதயத்தில் இரக்கம் சுரக்க வைப்பதாகும்

சனவரி 18, மாலை 5.30 மணிக்கு, உரோம் புனித பவுல் பசிலிக்காவில், திருத்தந்தை மாலை திருவழிபாட்டை தலைமையேற்று நடத்துவார்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சனவரி 08, இச்செவ்வாய் காலையில், சாந்தா மார்த்தா இல்லத்தில் நிறைவேற்றிய திருப்பலி மற்றும் மறையுரையை மையப்படுத்தி, அவரின் டுவிட்டரில் செய்தி ஒன்று இடம்பெற்றிருந்தது.

அன்பு, புறக்கணிப்பைச் சகித்துக் கொள்ளாது, மாறாக, அன்பு பரிவிரக்கமுள்ளது. அன்பு என்பது, பிறரோடு ஒத்துப்போகும் விதத்தில், ஒருவர் தனது இதயத்தை வைப்பதாகும் என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டரில் பதிவாகியிருந்தன.

மேலும், கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தின் துவக்க நாளான சனவரி 18 வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு, உரோம் புனித பவுல் பசிலிக்காவில், மாலை திருவழிபாட்டை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நடத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உண்மையிலேயே நீதிமான்களாக வாழ்வதைத் தேடுங்கள் (இ.சட்டம் 16, 18-20) என்ற தலைப்பில், 2019ம் ஆண்டின் கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரம் கடைப்பிடிக்கப்படுகின்றது. புனித பவுல் ணனந்திரும்பிய விழாவான சனவரி 25ம் தேதி, இந்த வாரம் நிறைவடையும். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 January 2019, 15:45