தேடுதல்

VATICAN-RELIGION-AUDIENCE-POPE VATICAN-RELIGION-AUDIENCE-POPE 

கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரம் சனவரி 18-25

சனவரி 18, இவ்வெள்ளியன்று கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரம் தொடங்குவதையொட்டி, அன்று மாலை உரோம் புனித பவுல் பசிலிக்காவில், திருப்புகழ்மாலை வழிபாட்டை தலைமையேற்று நடத்துவார், திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

‘எங்கள் வானகத் தந்தாய்' என்ற, இயேசு கற்பித்த செபம் குறித்த, தன் இப்புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சனவரி 18, இவ்வெள்ளியன்று துவங்கவிருக்கும் கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரம் குறித்து எடுத்துரைத்தார். இவ்வெள்ளியன்று, உரோம் நகரின் புனித பவுல் பசிலிக்காப் பேராலயத்தில் மாலை திருப்புகழ்மாலை திருவழிப்பாட்டுடன், 'உண்மையிலேயே நீதிமான்களாக இருக்க முயலுங்கள்' என்ற தலைப்பில் கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரம் துவங்குகிறது. 'எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக' (யோவா.17:21) என்ற இயேசுவின் விருப்பத்திற்கு இணங்க, கிறிஸ்தவர்கள் அனைவரும் ஒரே குடும்பமாக இருக்க செபிக்குமாறு நாம் இந்த ஆண்டும் அழைப்புப் பெற்றுள்ளோம். உலகில் கடைநிலைக்குத் தள்ளப்பட்டுள்ள பலவீனர்களுக்கு ஆதரவை வழங்குவதிலும், சரியான பலன்தரும் பதிலுரைகளைத் தருவதிலும், உண்மை நீதியை உறுதிசெய்யும் நம் ஒன்றிணைந்த சாட்சியத்தை உருவாக்குவதே இந்த கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தின் நோக்கம் என்றுரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். பின்னர் திருத்தந்தை, திருப்பயணிகள் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார்.

மத்திய அமெரிக்க நாடான பானமாவில், சனவரி 22, வருகிற செவ்வாயன்று துவங்கும்  34வது உலக இளையோர் நாள் நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்கென, சனவரி 23, வருகிற புதனன்று பானமாவிற்கு திருத்தூதுப்பயணம் மேற்கொள்ளும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சனவரி 27ம் தேதி அப்பயணத்தை நிறைவு செய்வார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 January 2019, 14:47