தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருமுழுக்கு  கொடுக்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ் திருமுழுக்கு கொடுக்கிறார் 

விசுவாசத்தைக் கற்பதற்கேற்ற முதலிடம் குடும்பம்

குடும்பங்களில் அன்பையும், அமைதியையும், இயேசுவின் இருப்பையும் காணும் குழந்தைகள், விசுவாசத்தைக் கற்றுக்கொள்வர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

பெற்றோர் ஒவ்வொருவரும் தங்கள் வார்த்தையாலும் வாழ்வு எடுத்துக்காட்டாலும், குழந்தைகளுக்கு விசுவாசத்தை வழங்கவேண்டும் என அழைப்புவிடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசுவின் திருமுழுக்கு விழாவான ஜனவரி 13 ஞாயிறன்று, வத்திக்கானின் சிஸ்டைன் சிற்றாலயத்தில் 27 குழந்தைகளுக்கு திருமுழுக்கு வழங்கும் திருப்பலியை நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விசுவாசத்தை கற்பதற்கும், அதற்கு சாட்சியாக விளங்குவதற்கும், குழந்தைகளுக்கு கிடைக்கும் முதல் இடம் குடும்பம் என மறையுரையாற்றினார்.

'உங்கள் விசுவாச வாழ்வைக்கொண்டு குழந்தைகளுக்கு விசுவாசத்தை வழங்குங்கள். தம்பதியருக்கு இடையே நிலவும் அன்பையும், வீட்டில் உள்ள அமைதியையும், அங்கு இயேசுவின் இருப்பையும் காணும் குழந்தைகள், விசுவாசத்தைக் கற்றுக்கொள்வார்கள் என தன் மறையுரையில் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

தம்பதியரிடையே முரண்பாடான கருத்துக்கள் எழுவது இயல்பே, ஆனால், குழந்தைகள் முன்னிலையில் சண்டையிடாமல் இருப்பது அவசியம் எனவும் உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விசுவாசத்தை குழந்தைகளுக்கு வழங்கவேண்டியது, தம்பதியரின் கடமை எனவும் வலியுறுத்தினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 January 2019, 15:50