தேடுதல்

Vatican News
மூவேளை செப உரையின்போது -200119 மூவேளை செப உரையின்போது -200119  (Vatican Media)

திருத்தந்தை : இதயத்தின் இரும் பெரும் வலிகள்

கொலம்பியாவில் நிகழ்ந்த அண்மை வன்முறைகளும், மத்தியதரைக் கடலில் புலம்பெயர்ந்தோர் மூழ்கி இறந்ததும், இதயத்தில் வலி தருகின்றன‌

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இன்று என் இதயத்தில் இரு பெரும் வலிகள் உள்ளன. ஒன்று கொலம்பியா, ஏனையது, மத்தியதரைக்கடல் நிகழ்வு, என இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப்பின் தன் கவலையை வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கொலம்பியாவின் பொகோட்டா தேசியக் காவலர் கல்லூரி மீது தாக்குதல் நடத்தியதில், 21 பேர் உயிரிழந்தது, மற்றும், 68 பேர் படுகாயமடைந்தது குறித்தும், மத்தியதரைக்கடலில் 117 பேர், 53 பேர் என, புகலிடம் தேடுவோரை ஏற்றிவந்த இரு கப்பல்கள், அண்மையில் மூழ்கியது குறித்தும் கவலையை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உயிரிழந்தவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்காக தான் செபிப்பதாகத் தெரிவித்தார்.

கொலம்பியாவின் அமைதிக்காக தொடர்ந்து செபிப்பதாக உறுதியளித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தங்கள் வருங்கால வாழ்வைத் தேடி வந்த மக்கள், மத்திய தரைக்கடலில் மூழ்கி இறந்தது பற்றியும் குறிப்பிட்டு, அவர்களுக்காக தான் செபிப்பதாகவும் தெரிவித்தார்.

அண்மையில், ஆப்ரிக்காவிலிருந்து, ஐரோப்பாவில் புகலிடம் தேடும் நோக்கத்துடன் வந்த மக்களை ஏற்றி வந்த இரு பெரிய படகுகள் விபத்துக்குள்ளாகியதில், அவற்றில் இருந்த 170 பேரில் 4 பேர் மட்டுமே உயிர் தப்பியுள்ளனர்.

20 January 2019, 13:00