தேடுதல்

திருத்தந்தை,  அபு தாபியின் இளவரசர், Sheikh Mohammed bin Zayed Al Nahyan திருத்தந்தை, அபு தாபியின் இளவரசர், Sheikh Mohammed bin Zayed Al Nahyan 

அபு தாபியில் திருத்தந்தை – பயண விவரங்கள்

அபு தாபியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளவிருக்கும் திருத்தூதுப் பயணத்தின் விவரங்கள், டிசம்பர் 12, இப்புதனன்று வெளியிடப்பட்டன

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அரபு அமீரகத்தின் அபு தாபியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளவிருக்கும் திருத்தூதுப் பயணத்தின் விவரங்களை, டிசம்பர் 12, இப்புதனன்று திருப்பீடம் வெளியிட்டுள்ளது.

2019ம் ஆண்டு, பிப்ரவரி 3ம் தேதி, ஞாயிறு பிற்பகல், உரோம் நேரம் 1 மணிக்கு ஃபியூமிச்சீனோ பன்னாட்டு விமானத் தளத்திலிருந்து புறப்படும் திருத்தந்தை, அபு தாபியில், உள்ளூர் நேரம், இரவு 10 மணிக்கு, அங்கு சென்றடைவார்.

பிப்ரவரி 4ம் தேதி, நண்பகல் 12 மணிக்கு, அரசுத்தலைவர் மாளிகையில் இடம்பெறும் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கும் திருத்தந்தை, பின்னர், அபு தாபியின் இளவரசர், Sheikh Mohammed bin Zayed Al Nahyan அவர்களையும், அரசு அதிகாரிகளையும் சந்திப்பார்.

மாலை 5 மணிக்கு, அபு தாபியின் தலைமைத் தொழுகைக்கூடத்தில், இஸ்லாமியத் தலைவர்களை சந்திக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மாலை 6 மணிக்கு, இடம்பெறும் பலசமய உரையாடல் நிகழ்வில் உரை வழங்குவார்.

பிப்ரவரி 5ம் தேதி, செவ்வாயன்று, காலை 9.15 மணிக்கு அங்குள்ள பேராலயத்திற்கு செல்லும் திருத்தந்தை, 10,30 மணிக்கு, Zayed Sports City எனப்படும் இடத்தில் திருப்பலி நிறைவேற்றுவார்.

பிற்பகல் 1 மணியளவில் அபு தாபியிலிருந்து புறப்படும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மாலை, உரோம் நகர் உள்ளூர் நேரம் 5 மணியளவில், சாம்பினோ விமான நிலையத்தை வந்தடைவார்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 December 2018, 15:30