தேடுதல்

Vatican News
குழந்தை இயேசு உருவங்களை, மூவேளை செப உரையின் இறுதியில், திருத்தந்தை ஆசீர்வதித்தார் குழந்தை இயேசு உருவங்களை, மூவேளை செப உரையின் இறுதியில், திருத்தந்தை ஆசீர்வதித்தார்  (Vatican Media)

குழந்தை இயேசு உருவங்களை அர்ச்சித்த திருத்தந்தை

மொராக்கோ நாட்டின் மர்ரகேஷ் நகரில், புலம்பெயர்ந்தோர் குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை, உலக அரசுகள் செயல்படுத்த வேண்டுமென்ற செபத்தை மக்கள் மேற்கொள்ளவேண்டும் – திருத்தந்தை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

புலம்பெயர்ந்த மக்களைக் குறித்து உலக அரசுகள் பொறுப்பான முடிவுகள் எடுக்க அனைவரும் செபிக்க வேண்டும் என்ற விண்ணப்பத்தை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறு வழங்கிய மூவேளை செப உரையின் இறுதியில் விடுத்தார்.

புலம் பெயர்ந்தோர் குறித்த உலக ஒப்பந்தம் ஒன்றை நிறைவேற்ற, சில நாள்களுக்கு முன், மொராக்கோ நாட்டின் மர்ரகேஷ் நகரில் நடைபெற்ற கூட்டத்தைப்பற்றி குறிப்பிட்டுப் பேசியத் திருத்தந்தை, அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை, உலக அரசுகள் செயல்படுத்த வேண்டுமென்ற செபத்தை மக்கள் மேற்கொள்ளவேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.

மேலும், புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் கூடியிருந்த குழந்தைகள், தங்கள் இல்லங்களின் குடில்களில் வைக்கப்படும் குழந்தை இயேசு உருவத்தை, மூவேளை செப உரையின் இறுதியில், உயர்த்திப் பிடிக்க, திருத்தந்தை அத்திரு உருவங்களை ஆசீர்வதித்தார்.

குழந்தை இயேசுவிடமிருந்து நாம் அனைவரும் பணிவைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை, குழந்தைகளிடம் சிறப்பாகக் குறிப்பிட்ட திருத்தந்தை, அன்னைமரியா அக்குழந்தைகளையும் அவர்களது குடும்பங்களையும் பாதுக்காக்க வேண்டுமென்று கூறி, தன் ஆசீரை வழங்கினார்.

17 December 2018, 15:03