தேடுதல்

Bayer நிறுவனம் திருத்தந்தையிடம் வழங்கிய Incubators Bayer நிறுவனம் திருத்தந்தையிடம் வழங்கிய Incubators 

பிறக்கும் குழந்தைகள் நலனுக்காக திருத்தந்தையின் பரிசு

Incubators எனப்படும் அடைகாக்கும் கருவிகள் இரண்டை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் நகரில் இயங்கிவரும் இரு மருத்துவ மனைகளுக்கு, பரிசாக வழங்கினார்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

குறைபாடுகளுடன், அல்லது, குறைபிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளைக் காப்பதற்கு பயன்படுத்தப்படும் incubators எனப்படும் அடைகாக்கும் கருவிகள் இரண்டை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உரோம் நகரில் இயங்கிவரும் குழந்தை இயேசு, மற்றும் Fatebenefratelli என்ற இரு மருத்துவ மனைகளுக்கு, டிசம்பர் 18, இச்செவ்வாயன்று, பரிசாக வழங்கினார்.

இவ்வாண்டு நவம்பர் 21ம் தேதி, புதனன்று, திருத்தந்தையின் மறைக்கல்வி உரை சந்திப்பில், Bayer நிறுவனம், திருத்தந்தைக்கு வழங்கிய இவ்விரு அடைகாக்கும் கருவிகளையும், திருத்தந்தை, இவ்விரு மருத்துவமனைகளுக்கு வழங்கினார்.

திருத்தந்தையின் தர்மப் பணிகளுக்குப் பொறுப்பாக இருக்கும், கர்தினால் Konrad Krajewski அவர்கள், Bayer நிறுவனத்தின் தலைவர் Monica Poggio அவர்களின் முன்னிலையில், அடைகாக்கும் கருவியொன்றை ஆசீர்வதித்து, Fatebenefratelli மருத்துவமனையின் பொறுப்பாளர்களிடம் அளித்தார்.

Fatebenefratelli மருத்துவமனையில், ஒவ்வோர் ஆண்டும் 600க்கும் அதிகமான குழந்தைகளுக்கு, அடைகாக்கும் கருவிகளின் உதவிகள் தேவைப்படுகின்றன என்றும், தற்போது, இப்பிரிவில் 13 குழந்தைகள் இந்த உதவியைப் பெற்று வருகின்றனர் என்றும், இம்மருத்துவமனையின் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

General Electric நல பராமரிப்பு நிறுவனம், இதையொத்த உதவிகளை, திருத்தந்தையின் பெயரால், எத்தியோப்பியா நாட்டிற்கு அனுப்பவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 December 2018, 15:43