தேடுதல்

சாந்தா மார்த்தா மருந்தகப் பணியாளர்கள் குடும்பத்தினருடன் பிறந்தநாள் கொண்டாடியத் திருத்தந்தை சாந்தா மார்த்தா மருந்தகப் பணியாளர்கள் குடும்பத்தினருடன் பிறந்தநாள் கொண்டாடியத் திருத்தந்தை 

சாந்தா மார்த்தா மருந்தக பணியாளர்களுடன் திருத்தந்தை

குழந்தைகளுக்காக, குழந்தைகளுடன் பணியாற்றுவதற்கு, எளிமையான உள்ளம் தேவைப்படுகிறது – திருத்தந்தை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அன்னை மரியா உரோம் நகரில் வாழ்ந்திருந்தால், குழந்தை இயேசுவை, சாந்தா மார்த்தா மருந்தகத்திற்கு அழைத்து வந்திருப்பார் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னை சந்திக்க வந்திருந்த இம்மருந்துக குழுமத்திடம் கூறினார்.

சாந்தா மார்த்தா மருந்தகத்தில் பணியாற்றுவோர், மற்றும் அவர்களது குடும்பத்தினர் அடங்கிய 800க்கும் அதிகமானோரை, டிசம்பர் 16, இஞ்ஞாயிறன்று, நண்பகல் மூவேளை செப உரைக்கு முன்னதாக, திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கத்தில் சந்தித்த திருத்தந்தை, அவர்களுக்கு கிறிஸ்மஸ் வாழ்த்துக்களை வழங்கிய வேளையில் இவ்வாறு கூறினார்.

இந்த மருந்தகத்தில் பணியாற்றுவோர், குழந்தைகளுக்கு ஆற்றும் பணிகளுக்கு தன் சிறப்பான பாராட்டுக்களைக் கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குழந்தைகளுக்காக, குழந்தைகளுடன் பணியாற்றுவதற்கு, எளிமையான உள்ளம் தேவைப்படுகிறது என்பதை எடுத்துரைத்தார்.

டிசம்பர் 17, இத்திங்களன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் 82வது பிறந்த நாளைக் கொண்டாடவிருப்பதையொட்டி, சாந்தா மார்த்தா மருந்தகத்தைச் சார்ந்தோர், அந்த விழாவை ஞாயிறன்று திருத்தந்தையுடன் இணைந்து கொண்டாடினர்.

1922ம் ஆண்டு, திருத்தந்தை 11ம் பயஸ் அவர்களால் நிறுவப்பட்ட சாந்தா மார்த்தா மருந்தகம், கடந்த 96 ஆண்டுகள் அரும்பணியாற்றிவருகிறது என்பதும், 2005ம் ஆண்டு, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் இந்த மருந்தகத்திற்கு சென்று பார்வையிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 December 2018, 14:57