தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், TV2000 என்ற தொலைக்காட்சியில் அளித்த பேட்டி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், TV2000 என்ற தொலைக்காட்சியில் அளித்த பேட்டி 

புனித யோசேப்பு, கடவுளின் எழுத்தராக பணியாற்றவில்லை

'அருள்நிறை மரியாவே வாழ்க' தொலைக்காட்சித் தொடரில், அன்னை மரியாவுக்கும், யோசேப்புக்கும், குழந்தை இயேசுவுக்கும் இருந்த உறவுகள் குறித்து, திருத்தந்தை, தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

புனித யோசேப்பு, கடவுளின் எழுத்தராக பணியாற்றவில்லை, மாறாக, அன்னை மரியாவின் அன்புமிகுந்த கணவராக வாழ்ந்தார் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், TV2000 என்ற தொலைக்காட்சியில் அளித்த பேட்டியில் கூறினார்.

'அருள்நிறை மரியாவே வாழ்க' என்ற தலைப்பில், திருத்தந்தை வழங்கிவரும் சிந்தனைகள், ஒவ்வொரு செவ்வாயன்றும் இரவு 9 மணிக்கு, TV2000 தொலைக்காட்சியில், வத்திக்கான் ஊடகத் துறையின் ஒத்துழைப்புடன் ஒளிபரப்பாகி வருகின்றன.

இந்தத் தொலைக்காட்சித் தொடரில், இச்செவ்வாயன்று பேசிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்னை மரியாவுக்கும், யோசேப்புக்கும் இருந்த உறவு குறித்தும், அவருக்கும் குழந்தை இயேசுவுக்கும் இருந்த உறவு குறித்தும் தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

குழந்தை இயேசு நாசரேத்தில் வளர்ந்துவந்த வேளையில், அவரைக் குறித்த முக்கியமான முடிவுகளை புனித யோசேப்பு எடுத்திருக்க வேண்டும், ஏனெனில், அவர்தான் மரியாவின் கணவராக, திருக்குடும்பத்தின் தலைவராக பொறுப்பேற்றிருந்தார் என்று திருத்தந்தை தன் பேட்டியில் குறிப்பிட்டார்.

தங்கள் மகன் இயேசுவைக் குறித்து ஊரார் என்ன சொன்னாலும், அவற்றைப் பொருட்படுத்தாமல், தங்கள் மகன் மீது முழு நம்பிக்கை கொண்டு யோசேப்பும், மரியாவும் அவரை வளர்த்துவந்தனர் என்பதையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் தொலைக்காட்சித் தொடரில் எடுத்துரைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 November 2018, 14:52