வத்திக்கான் வளாக முதலுதவி மையத்தைப் பார்வையிடுகிறார் திருத்தந்தை வத்திக்கான் வளாக முதலுதவி மையத்தைப் பார்வையிடுகிறார் திருத்தந்தை 

முதலுதவி மையத்தைப் பார்வையிட்டார் திருத்தந்தை

சமூகத்தின் விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டோர் மற்றும் ஏழைகளின் தேவைகள் மீது மிகுந்த அக்கறை காட்டுவதற்கு உலக வறியோர் நாள் அழைப்பு விடுக்கின்றது

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

“நான் எவ்வித தவறும் இழைக்கவில்லை என்பதால், நான் நன்றாக இருக்கின்றேன் என்ற நினைவால் எவரும் தன்னை ஏமாற்றி கொள்ளக் கூடாது. இயேசுவைப் பின்செல்பவராய் இருப்பதற்கு, தவறு செய்யாமல் இருந்தால் மட்டும் போதாது, ஏனெனில், நாம் ஆற்ற வேண்டிய நன்மையும் உள்ளது” என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில், இச்சனிக்கிழமையன்று பதிவாகி இருந்தன.

மேலும், நவம்பர் 18, இஞ்ஞாயிறன்று கடைப்பிடிக்கப்படும் இரண்டாவது உலக வறியோர் நாளை முன்னிட்டு, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள முதலுதவி மையத்தை, எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, இவ்வெள்ளியன்று பார்வையிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இம்மையத்தில் பணியாற்றும் மருத்துவர்களையும், அங்கு சிகிச்சை பெறுகின்ற நோயாளர்களையும் சந்தித்து, ஆசி வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இம்மையம், உலக வறியோர் நாளை முன்னிட்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வேண்டுகோளின்பேரில் அமைக்கப்பட்டுள்ளது

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 November 2018, 14:51