தேடுதல்

Vatican News
நொபெல் அமைதி விருது பெற்ற கைலாஷ் சத்யார்த்தி, திருத்தந்தையை சந்திக்கிறார் நொபெல் அமைதி விருது பெற்ற கைலாஷ் சத்யார்த்தி, திருத்தந்தையை சந்திக்கிறார்  (Vatican Media)

திருத்தந்தை, கைலாஷ் சத்யார்த்தி சந்திப்பு

மனித உரிமை ஆர்வலரான கைலாஷ் சத்யார்த்தி அவர்கள், சிறார் அடிமைத்தனம் ஒழிக்கப்படுவதற்கு, 1980ம் ஆண்டிலிருந்து உழைத்து வருகிறார்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

இயேசுவை, நம் வாழ்வில், ஒவ்வொரு நாளும், எல்லா வேளைகளிலும் தேட வேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளியன்று கூறினார்.

நாம் விரும்பும்போது மட்டும் இயேசுவைப் பின்செல்லாமால், ஒவ்வொரு நாளும் அவரைத் தேட வேண்டும், நம்மை எப்போதும் அன்புகூருகின்ற, நம் வாழ்வுக்கு அர்த்தம் தருகின்ற மற்றும் நமக்கு சக்தி தருகின்ற கடவுளை இயேசுவில் கண்டுகொள்ள வேண்டும் என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில், இவ்வெள்ளியன்று வெளியாயின.

மேலும், 2014ம் ஆண்டில் நொபெல் அமைதி விருது பெற்ற இந்தியரான கைலாஷ் சத்யார்த்தி (Kailash Satyarthi) அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

மனித உரிமை ஆர்வலரான கைலாஷ் சத்யார்த்தி அவர்கள், இதுவரை 83 ஆயிரத்திற்கு அதிகமான சிறாரை விடுவித்து, அவர்களின் கல்விக்கும் மறுவாழ்வுக்கும் உதவியுள்ளார்.

இன்னும், திருப்பீடத்திற்கான போஸ்னிய-எர்செகொவினா நாட்டு புதிய தூதர் Josip Gelo அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து நம்பிக்கைச் சான்றிதழ்களைச் சமர்ப்பித்து ஆசி பெற்றார்.

16 November 2018, 15:01