தேடுதல்

Vatican News
அமேசான் பகுதியில் வாழும் பழங்குடி மக்களிடையே திருத்தந்தை அமேசான் பகுதியில் வாழும் பழங்குடி மக்களிடையே திருத்தந்தை  (AFP or licensors)

வன்முறைகளிலிருந்து விலகியிருக்கும் வரம் கேட்போம்

நிபந்தனைகள் ஏதுமின்றி அன்புகூர்ந்த இயேசுவின் அதே அன்பை நாமும் கடைபிடிப்பதே கிறிஸ்தவ வாழ்வு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

நம் பொது இல்லத்திற்காக நாம் வன்முறைகளை விட்டு விலகியிருப்போம் என்ற அழைப்புடன் இச்செவ்வாய்க்கிழமை டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

'நம் பொது இல்லத்தை பாராமரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், வன்முறை வார்த்தைகள், மற்றும், செயல்களிலிருந்து நம் இதயங்கள் தூர விலகியிருக்க வேண்டும் என செபிப்பதில் நம்மை அர்ப்பணிப்போம்' என தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை.

மேலும், இத்திங்களன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட டுவிட்டர் செய்தி, 'இயேசு நம்மை எவ்வித நிபந்தனைகளுமின்றி அன்பு கூர்ந்தார். கிறிஸ்தவ வாழ்வு என்பது, இயேசுவின் நிபந்தனைகளற்ற அன்பை பின்பற்றுவதாகும்' என அமைந்திருந்தது. 

இதற்கிடையே, இத்திங்களன்று காலை, பிரேசில் நாட்டின் Obidos மறைமாவட்ட ஆயர்  Bernardo Bahlmann அவர்களை திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை, அமேசான் பகுதியில் வாழும் பழங்குடி மக்களிடையே, அப்பகுதியில் பணியாற்றும் தலத்திருஅவை, படகு மருத்துமனை வழியாக மருத்துவப் பணிகளை ஆற்றிவருவது குறித்து தன் பாராட்டுக்களை வெளியிட்டதுடன், இயற்கையின் மீது அந்த பழங்குடி இனத்தவர் காட்டி வரும் அக்கறை குறித்து, தன் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் வெளியிட்டார்.

06 November 2018, 14:59