தேடுதல்

இரஷ்ய கலைகள் அருங்காட்சியகத்தைப் பார்வையிடுகிறார் திருத்தந்தை இரஷ்ய கலைகள் அருங்காட்சியகத்தைப் பார்வையிடுகிறார் திருத்தந்தை 

இரஷ்ய கலைகள் அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டார் திருத்தந்தை

ஆறு ஆண்டுகளுக்கு முன்னர், தனது கணவரால் அமிலம் வீசப்பட்டு, உருவிழந்து வாழ்கின்ற பெண் ஒருவருக்கு, திருத்தந்தை ஆறுதல் கடிதம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஆண்டவர் நம்மை அழைக்கும்போது, நம்மை அவர் எந்நிலையில் காண வேண்டுமென்ற நம் விருப்பம் பற்றி சிந்திக்குமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நவம்பர் 27, இச்செவ்வாயன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், அழைப்பு விடுத்துள்ளார்.  

இச்செவ்வாய் காலையில், வத்திக்கானின் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் ஆற்றிய மறையுரையை மையப்படுத்தி, டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ள திருத்தந்தை, "ஆண்டவர் நம்மை அழைக்கும்போது, அவர் நம்மை, எந்நிலையில் காண வேண்டுமென்று விரும்புகிறோம் என, நம்மையே நாம் கேட்டுக்கொள்வதற்கு, இவ்வாரத்தில் திருஅவை அழைப்பு விடுக்கின்றது" என்று கூறியுள்ளார்.

மேலும், வத்திக்கான் வளாகத்தின் வலது பக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள, இரஷ்ய கலைகள் அருங்காட்சியகத்தை, இச்செவ்வாய் காலை பத்து மணியளவில் ஏறத்தாழ நாற்பது நிமிடங்கள் பார்வையிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இன்னும், 2012ம் ஆண்டு ஏப்ரலில், தனது கணவரால் அமிலம் வீசப்பட்டு, உருவிழந்து வாழ்கின்ற, 35 வயது நிரம்பிய இத்தாலியப் பெண், பிலோமினா லாம்பெர்த்தி என்பவருக்கு, கடந்த ஜூன் 11ம் தேதி கடிதம் அனுப்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தீமை செய்தவரிடம் மன்னிப்பு கேட்கத் தெரியாத ஒரு மனித சமுதாயத்தில், தீங்கு இழைத்தவர்க்காக, தான் மன்னிப்பை இறைஞ்சுவதாகக் கூறியுள்ளார்.

திருத்தந்தையின் இக்கடிதம், பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு நாளான, நவம்பர் 25, கடந்த ஞாயிறன்று, இத்தாலிய தொலைகாட்சியில் வாசிக்கப்பட்டது.

பிலோமினா லாம்பெர்த்தி அவர்கள், ‘மற்றொரு வாழ்வு’ என்ற நூலை, திருத்தந்தைக்கு அனுப்பியதையடுத்து, திருத்தந்தை, அப்பெண்ணுக்கு, கடிதம் ஒன்றை எழுதினார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 November 2018, 14:37