தேடுதல்

'வானுலகின் மாணவர்கள்' என்ற இத்தாலிய அமைப்பின் அங்கத்தினர்களை சந்தித்து உரையாடிய திருத்தந்தை 'வானுலகின் மாணவர்கள்' என்ற இத்தாலிய அமைப்பின் அங்கத்தினர்களை சந்தித்து உரையாடிய திருத்தந்தை  

இசை வழியே நற்செய்தி, வாழ்வு எடுத்துக்காட்டு வழியே பலம்பெறும்

நற்செய்தி அறிவிப்பு பணியில் ஈடுபடும் இளையோர், கிறிஸ்தவ அன்பின் பலத்தையும், அழகையும் வெளிப்படுத்தட்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

உலக இரைச்சலில் மூழ்கிப் போய்விடாமல், நம் உள்மன வாழ்வில் அக்கறை எடுத்து, செபத்தில் வளர வேண்டியதன் தேவையை வலியுறுத்தினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இசை மற்றும் பாடல்கள் வழியாக நற்செய்தியை அறிவித்து வரும் 'வானுலகின் மாணவர்கள்' என்ற இத்தாலிய அமைப்பின் அங்கத்தினர்களை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வமைப்பை தோற்றுவித்த இயேசு சபை அருள்பணியாளர் ஜுசப்பே அரியோனே அவர்களின் நோக்கம் குறித்து எடுத்துரைத்தார்.

பல்வேறு சாலைகள் சந்திக்கும் இடங்களுக்குச் சென்று, அங்கு இளையோருடன் இணைந்து, இசை மற்றும் பாடல்கள் வழியாக நற்செய்தியை அறிவித்து வந்த அருள்பணி அரியோனே அவர்கள், கிறிஸ்தவ அன்பின் பலத்தையும், அழகையும் வெளிப்படுத்தவும் இதனை பயன்படுத்தினார் என்றார் திருத்தந்தை.

இசை மற்றும் பாடல்கள் வழியாக இவ்வமைப்பினர் அறிவிக்கும் நற்செய்தி, அவர்களின் வாழ்வு எடுத்துக்காட்டுக்கள் வழியாக மேலும் பலம் பெறுகின்றது என்பதையும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விவிலிய பாரம்பரியத்துடன், குறிப்பாக, திருப்பாடல்களின் வழியில் துவக்கப்பட்ட இந்த 'வானகத்தின் மாணவர்கள்' அமைப்பு, அமைதி, மற்றும், உடன்பிறப்பு உணர்வுகளை பரப்பி வருவது குறித்தும் பாராட்டினார்.

இசை மற்றும் பாடல்கள் வழியாக நற்செய்தியை அறிவிக்கும் நோக்கத்துடன் 1968ம் ஆண்டு, இயேசு சபை அருள்பணி அரியோனே அவர்களால் துவக்கப்பட்ட இந்த அமைப்பு, தன் 50வது ஆண்டையும், நிறுவனர் அரியோனே அவர்கள் இறந்ததன் 10ம் ஆண்டையும் தற்போது சிறப்பித்து வருகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 November 2018, 16:48