தேடுதல்

உக்ரைனில் Holodomor நினைவு நாள் உக்ரைனில் Holodomor நினைவு நாள்  

பஞ்சம் எனும் ஆயுதத்தால் கொல்லப்பட்டோர் குறித்து திருத்தந்தை

செயற்கையான பஞ்சத்தை உருவாக்கி, மக்களைக் கொல்லும் நிலை இனி ஒரு நாளும் இடம்பெறாது என உறுதி எடுப்போம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

சோவியத் அரசால் பஞ்சமும் வறுமையும் செயற்கையான முறையில் உருவாக்கப்பட்டு, பல இலட்சக்கணக்கான உக்ரைன் மக்கள் மடிவதற்கு காரணமான Holodomor மரண நாள், கடந்த சனிக்கிழமையன்று நினைவு கூரப்பட்டது குறித்து, தன் மூவேளை செப உரையின் இறுதியில் குறிப்பிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

சோவியத் அரசால் உருவாக்கப்பட்ட இந்த பஞ்ச நிலைகளுக்கு பல இலட்சக்கணக்கான  உக்ரைன் மக்கள் பலியானது போன்ற ஒரு நிகழ்வு, இனிமேல் வரலாற்றில் ஒரு நாளும் இடம்பெறக் கூடாது என்பதை, இந்த வரலாற்றின் ஆழமான காயம் நமக்கு நினைவுறுத்தி நிற்கிறது என எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உக்ரைன் நாடு, பல காலமாக ஏங்கிக் கொண்டிருக்கும் அமைதி எனும் கொடை, அந்த அன்பு நிறைந்த  நாட்டிற்கு கிட்டவேண்டும் என இறைவனிடன் செபிப்போம் என விண்ணப்பித்தார்.

பட்டினியால் மக்கள் உயிரிழக்கும் வண்ணம் ஒரு செயற்கையான சூழலை உருவாக்கி, உக்ரைன் மக்களுள் பல இலட்சக்கணக்கானோரின் உயிர்களை 1932 மற்றும் 33ம் ஆண்டுகளில் பறித்த சோவியத் யூனியனின் செயலே Holodomor என அழைக்கப்படுகின்றது. Holodomor என்றால் உக்ரைன் மொழியில், பசி வழியாக கொல்லுதல் என்று பொருளாகும்.

Holodomor பட்டினிச்சாவின்போது, 1 கோடியே 20 இலட்சம் பேர் வரை இறந்திருக்கலாம் என துவக்க கால கணிப்புகள் குறிப்பிட்டாலும், இந்த எண்ணிக்கை 70 இலட்சம் முதல் 1 கோடி வரை இருக்கலாம் என ஐ.நா. கூட்டறிக்கையும், 33 இலட்சம் முதம் 75 இலட்சம் வரை இருக்கலாம் என அண்மை ஆய்வுகளும் தெரிவிக்கின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 November 2018, 13:23