தேடுதல்

Vatican News
டென்மார்க் நாட்டின் அரச தம்பதியர் டென்மார்க் நாட்டின் அரச தம்பதியர்  (Vatican Media)

டென்மார்க் அரச குடும்பத்தினருடன் திருத்தந்தை சந்திப்பு

மாலி திருஅவையின் 130ம் ஆண்டு கொண்டாட்டங்களுக்கு திருத்தந்தையின் பிரதிநிதியாக, திருப்பீடச் செயலர், கர்தினால் பரோலின் பங்கேற்பு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

டென்மார்க் நாட்டின் இளவரசர் Ereditario Frederick, மற்றும், இளவரசி மேரி ஆகியோர் இவ்வியாழனன்று காலை 10 மணிக்கு, திருப்பீடத்தில் திருதந்தையை சந்தித்து உரையாடினர் என்றும், மரியாதை நிமித்தமாக, மேற்கொள்ளப்பட்ட இச்சந்திப்பு, 30 நிமிடங்கள் நீடித்தது என்றும் திருப்பீடம் அறிவித்தது.

இதே நாளில், தங்கள் நாடுகளின் தூதர்களாக, திருப்பீடத்தில், தங்கள் பணிக்காலத்தை முடித்துச் செல்லும், இஸ்பெயின் நாட்டு தூதுவர் Gerardo Ángel Bugallo Ottone, அவர்களும், அர்மேனியா நாட்டுத் தூதர் Mikayel Minasyan அவர்களும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, திருப்பீடத்தில் சந்தித்து, விடைபெற்றுச் சென்றனர்.

மேலும், தங்கள் 'அத் லிமினா' சந்திப்பையொட்டி உரோம் நகர் வந்திருந்த, ருமேனியா மற்றும் மொல்தோவா நாட்டு ஆயர்களை, இவ்வியாழன் காலையில் சந்தித்து, அவர்களோடு உரையாடினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இதற்கிடையே, மாலி நாட்டில் கிறிஸ்தவம் அறிவிக்கப்பட்டதன் 130ம் ஆண்டுக் கொண்டாட்டங்கள், அந்நாடின் Kita மரியன்னை திருத்தலத்தில் இம்மாதம் 17 மற்றும் 18 தேதிகளில் இடம்பெற உள்ளதை முன்னிட்டு, அந்நிகழ்வுக்கு, திருப்பீடச் செயலர், கர்தினால் பியேத்ரோ பரோலின் அவர்களை, தன் பிரதிநிதியாக நியமித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

08 November 2018, 14:27