கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்
ஆயர்கள் கொண்டிருக்கவேண்டிய பண்புகள் குறித்து தன் மறையுரையில் கூறிய ஒரு கருத்தை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இத்திங்களன்று தன் டுவிட்டர் செய்தியாகவும் வெளியிட்டுள்ளார்.
"புனித பவுல் கூறியபடி, ஆயராகப் பொறுப்பேற்றுள்ளவர், பணிவு, மென்மை ஆகிய பண்புகள் கொண்டவராக இருக்கவேண்டும் என்று இந்நாளில் வேண்டிக்கொள்வோம்" என்ற சொற்களை, தன் டுவிட்டர் செய்தியாக, இத்திங்களன்று வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இஞ்ஞாயிறன்று திருத்தந்தை வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், “நம்மிடையே, நமக்காக இருக்கும் இறைவனின் வாழும் பிரசன்னத்தைக் குறிக்கும் திருநற்கருணைக் கொண்டாட்டத்தால் புனிதமடைந்துள்ள ஞாயிறு, நமக்கு புனிதமான நாளாகும்” என எழுதியுள்ளார்.
மேலும், சுவிட்சர்லாந்து கூட்டமைப்பில் விளங்கும் சுழற்சி முறையின் அடிப்படையில், தற்போது, தலைமைப் பதவி வகிக்கும் இவ்வாண்டு தலைவர் Alain Berset அவர்களை, நவம்பர் 12, இத்திங்களன்று, திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
இதே நாளில், தங்கள் ‘அத் லிமினா’ சந்திப்பையொட்டி, உரோம் நகர் வந்திருந்த குரோவேஷியா நாட்டு ஆயர்களையும், திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார், திருத்தந்தை.