தேடுதல்

Vatican News
பரகுவாய் நாட்டு அரசுத்தலைவருடன் திருத்தந்தை பரகுவாய் நாட்டு அரசுத்தலைவருடன் திருத்தந்தை   (ANSA)

ஞாயிறு திருப்பலியில் திருஅவையாக மாறுகிறோம்

திரு அவை வாழ்வின் இதயமாக விளங்கும் ஞாயிறு திருப்பலியில், இயேசுவை சந்தித்து, அவர் வார்த்தைக்கு செவி மடுத்து, ஊட்டம் பெற்று, திருஅவையாக மாறுதல்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

பரகுவாய் நாட்டு அரசுத்தலைவர் Mario Abdo Benítez அவர்கள், நவம்பர் 5, இத்திங்களன்று காலை,  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கும், அரசுத் தலைவருக்கும், பின்னர் திருப்பீட அதிகாரிகளுக்கும் அரசுத் தலைவருக்கும் இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில், இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் சுமூக உறவுகள் குறித்தும், பரகுவாய் நாட்டு தலத் திருஅவை அந்நாட்டின் வளர்ச்சிக்கு பல்வேறு துறைகள் வழியாக ஆற்றிவரும் பங்களிப்பு குறித்தும் பேசப்பட்டது.

மேலும்,  இதே திங்களன்று,  திருப்பீடத்திற்கான லெபனான் நாட்டு தூதர் Farid Elias El-Khazen அவர்கள், திருத்தந்தையை சந்தித்து, தன் நம்பிக்கைச் சான்றிதழ்களைச் சமர்ப்பித்து, பதவியை ஏற்றுக்கொண்டார்.

மேலும், இஞ்ஞாயிறன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட டுவிட்டர் செய்தி, ஞயிறு திருப்பலியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைப்பதாக இருந்தது.

'திருஅவை வாழ்வின் இதயமாக, ஞாயிறு திருப்பலி அமைந்துள்ளது. இத்திருப்பலியில் நாம், உயிர்த்த இயேசுவை சந்தித்து, அவரின் வார்த்தைகளுக்கு செவிமடுத்து, அவர் வழங்கும் விருந்தினால் ஊட்டம் பெற்று, திருஅவையாக மாறுகிறோம்' என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

05 November 2018, 14:20