காணொளிச் செய்தி வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் காணொளிச் செய்தி வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் 

சுதந்திர வாழ்வுக்கு கிறிஸ்தவர்கள் பணியாற்ற அழைப்பு

வறுமை, தொழில்நுட்பம், நுகர்வு கலாச்சாரம் ஆகியவற்றால் சுதந்திரம் அச்சுறுத்தப்படுகின்றது - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா – வத்திக்கான்

சுதந்திர வாழ்வுக்குத் தடையாக இருப்பவைகளை அகற்றுவதற்கு, கிறிஸ்தவர்கள் எல்லாரும் ஒன்றுசேர்ந்து பணியாற்ற வேண்டுமென்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழனன்று, ஒரு காணொளிச் செய்தியில் கேட்டுக்கொண்டார்.

இத்தாலியின் வெரோனா நகரில், நவம்பர் 22, இவ்வியாழனன்று தொடங்கியுள்ள திருஅவையின் சமூக கோட்பாடுகளின் எட்டாவது விழாவில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகளுக்கு, காணொளிச் செய்தி அனுப்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாறு கூறியுள்ளார்.

ஆபத்தான நிலையில் சுதந்திரம் என்ற தலைப்பில், இந்த விழா நடைபெற்று வருவதை, தன் செய்தியில் குறிப்பிட்ட திருத்தந்தை, சுதந்திரம், தனது உயரிய பொருளையும், அது அதிகமாக வலியுறுத்துவதையும் இழந்துவிடாமல் இருப்பதில், கிறிஸ்தவர்கள் மிகவும் கவனத்துடனும், விழிப்புடனும் இருக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

திருஅவையின் சமூக கோட்பாடுகளின் எட்டாவது விழா, நவம்பர் 25, வருகிற ஞாயிறன்று நிறைவடையும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 November 2018, 15:27